பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மானுடகதி, விலங்குகதி, நரககதி என்னும் பிறப்வுவகையான் உளதாய உயிர் வேறுபாட்டினும் அவை தம் தன்மைதிரியும் வளர்காலம் தேய்காலம் எனும் காலவேறுபாட்டினும் அவா பிறவிக்கு வித்தாதல் வேறுபடாமையின் எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும் என்றார். பிறவிக்கு வித்தாவது அவா என்னும் இக்கொள்கை எல்லாச் சமயங்கட்கும் ஒத்தலால் என்ப எனப் பொதுப்படக் கூறினார். இதனால் அவா பிறப்பிற்கு வித்தாதல் கூறப்பட்டது. பிறப்புத்துன்பமாதல் அறிந்தவர் ஒரு பொருளை வேண்டுவராயின் பிறவாமையை வேண்டிப் பெறுதல் வேண்டும். அங்ங்ணம் வேண்டப்பெறும் பிறவாமை தானும் ஒருபொருளையும் அவாவாமையை வேண்ட அவர்க்குத் தானேயுண்டாகும் என்பார்,

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்” (திருக். 362)

என்றார் திருவள்ளுவர். தோற்றமில் காலமாகத் தாம் பிறப்பு பிணி மூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை யுணர்ந்தவர்க்கு ஆசை இன்பத்தின் கண்ணே யாகனான் 'பிறவாமையை வேண்டும்’ என்றார். இவ்வுலகிற்குச் சிற்றின்பங்கருதி ஒரு பொருளை அவாவின் அவாவானது பிறப்பினும் வித்தாய்ப் பின்பும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின் பிறவாமையாகிய அப்பேறு ஒன்றையும் வேண்டாமையாகிய அவாவின்மையை வேண்டத் தானே வரும் என்றார். இத்திருக்குறட்பொருளைப் பகுத்து விளக்கும் முறையில் அமைந்தது,

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்மையால் வேண்டின தொன்றுமே வேண்டுவது வேண்டினது வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடு வேண்டாமை வேண்டுமவன்பால்”

(திருக்களிற்றுப்படியார் 40)

எனத் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அருளிய திருக்களிற்றுப்படியார் பாடலாகும்.

“வேண்டுவார் வேண்டுவதே பீந்தருளும் இறைவன்