பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

473


பால் ஒன்றை விரும்பி வேண்டுங்கால் பிறவாமையாகிய பேறொன்றுமே வேண்டத்தகுவதாகும் எனத் திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தினமையால் பிறவாமையாகிய அஃதொன்றுமே வேண்டிப் பெறுதற்குரியதாகும். பிறவாமையாகிய அப்பேறுதானும் உலகப்பொருள்களில் வைத்த அவாவையறுத்தலாகிய வேண்டாமையினை வேண்டத்தானேவரும் என்ற திருவள்ளுவர் வாய்மொழி யினால் யாவரும் விரும்பி வேண்டத்தக்க முதல்வன்பால் பிறவாமைக்குக் காரணமாகிய அவாவறுத்தல் ஒன்றுமே விரும்பிவேண்டத்தகுவதாகும்” என்பது மேற்காட்டிய பாடலின் பொருளாகும்.

அவாவின்மையே உயிர்களைத்தோற்றமில் காலமாகப் பற்றியுள்ள மலமாசினை நீக்கித் தூய்மையுடைய துறவறமாகிய வீட்டு நெறியினை நல்கி ஆன்மாவைத்துய்மை செய்வதாதலின் இத்தைைகய அவா வறுத்தலாகிய மனத்துய்மை வாய்மைப்பொருளாகிய இறைவனை இடைவிடாது சிந்தித்தலாலேயே பெறுதற்குரியதாகும். இவ்வுண்மையினை,

'தூஉய்மை யென்பதவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்டவரும்” (திருக். 364)

எனவரும் திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். உயிர் அநாதியே தன்னைப் பற்றியுள்ள மலமாகிய மாசு நீங்குதலே வீடாதலின் அவ்வீடுபேற்றினைத் 'து உய்மை’ என்றும் திரிபின்றியுள்ள மெய்ப்பொருளாகிய இறைவனை 'வாஅய்மை என்றும் கூறினார் திருவள்ளுவர். து உய்மை யாகிய வீடுபேறு அவாவின் மைக் காரணமாகப் பெறுதற்குரியது என்பார் 'தூஉய்மை’ என்பது அவாவின்மை எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார். வாய்மை என்றது மெய்ப்பொருளாகிய இறைவனை வேண்டுதல் - இடைவிடாது நினைத்துப் போற்றுதல், இதனால் அவாவறுத்தல் என்பது வீடடைதற்கு வழிமுறையானன்றி நேரே ஏதுவென்பதும், அத்தகைய அவாவறுத்தல் தானும் இறைவனை இடைவிடாது நினைந்து போற்றுதல் வாயிலாகவே ஒருவர்க்குக் கைகூடும் என்பதும் இத்