பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

475


என்றார் தெய்வப்புலவர். ஆராமையாவது நமக்கு உள்ளது போதும் என மனம் நிரம்பாமை. தாமேயன்றித் தம்பயனும் நிலையாமை வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன்மேல் வளர்தல். பெற்றது போதும் என மனம் நிரம்பாது பெறாத பொருளின் மேற் பற்றுவைப்பதே அவா எனப்படும் என அதன் இயல்பினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்தது, 'ஆராவியற்கை அவா என்னும் தொடராகும். "பேரா வியற்கை என்றது என்றும் மாறாது அழியாவின்ப நிலையினதாகிய வீடு பேற்றினைக் களிப்புக்கவற்சிகளும் பிறப்புப் பினிமூப்பு இறப்புக்களும் முதலாயின இன்றி உயிர் நிரதிசய (உயர்வறவுயர்ந்த இன்பத்ததாய் நிற்றலின், வீட்டினைப் பேராவியற்கை’ என்றும், அஃது அவா நீத்தவழிப் பெறுதல் ஒருதலை (உறுதி)யாதலின் அந்நிலையே தரும்” என்றும் கூறினார்.

'நன்றாய் ஞானங்கடந்து போய்நல்லிந்திரிய மெல்லா மீர்த் தொன்றாய்க்கிடந்த அரும் பெரும் பாழ் உலப்பிலதனை

யுணர்ந்துணர்ந்து சென்றாங்கின்ப துன்பங்கள் செற்றுக் களைந்து

பசையற்றால் அன்றே அப்போதே விடும் அதுவே வீடு வீடாமே”

(திருவாய்மொழி 78.5)

என்பதும் இக்கருத்தேபற்றி வந்தது. இந்நிலைமை யுடையவனை வடநூலார் சீவன் முத்தன் என்ப எனப் பரிமேலழகர் தரும் விளக்கம் தெய்வத் திருவருளால் வீடு பேற்றின்பம் உளதாம் என்னும் கடவுட் கொள்கையுடைய சமயங்கட்கெல்லாம் ஏற்புடையதாகும். இவ்வாறு உடம்பொடு கூடியுள்ள நிலையிலேயே அவா வறுத்து வீட்டின்ப நிலையெய்திய சீவன் முத்தர்களைப் பராவு.சீவர் (தேவாரம் 3.67.6) எனவும் நடமாடுங்கோயில் நம்பர்’ (திருமந்திரம் 1857) எனவும் போற்றுதல் சைவசித்தாந்தத் தமிழ் மரபாகும்.

இவ்வுலகில் உடம்புடன் கூடிவாழும் விழிப்பு நிலையிலேயே உலகப்பொருள்களின் அவாவை முற்றக்