பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என்றார். இயற்கையறிவையேயன்றிச் செயற்கையானாகிய கல்வியறிவையுங் கீழ்ப்படுத்து மேற்படுந் தன்மையது ஊழ் என்பது இதனால் வலியுறுத்தப்பட்டது.

உலகத்து ஊழினாலாகியஇயற்கை இரண்டுபடும். ஆதலாற் செல்வமுடையராதற்குக் காரணமான ஊழ் வேறு, அறிவுடையராதற் காரணமான ஊழ் வேறு என ஊழினை வகைப்படுத்துரைப்பது,

&« இருவேறுலகத் தியற்கை திருவேறு

தெள்ளியராதலும் வேறு” (திருக். 374)

எனவரும் திருக்குறளாகும். செல்வத்தினை ஈட்டுதலும் அதனைக் காத்தலும் அறிவுடையார்க்கல்லது இயலா தல்லவா? அங்ங்ணமாயினும் அறிவுடையார் வறியராகவும் அறிவிலார் செல்வராகவும் உலகியலிற் காணப்படுதலால் அறிவுடையராதற்குக் காரணமான ஊழ் செல்வ முடைமைக்குக் காரணமாகாமையும் செல்வமுடைய ராதற்குக் காரணமான ஊழ் அறிவுடைமைக்குக் காரண மாகாமையும் நன்கு தெளியப்படும் என்பார் திருவேறு தெள்ளியராதலும் வேறு என்றார். எனவே உலகிற் பொருளிட்டுதற்கு அறிவாகிய துைைணக்காரணமும் வேண்டப்படாது ஊழே காரணமாம் என்பது வலியுறுத்தப் التي ساسافا

உலகிற் பொருளிட்டுதற்கு நல்ல துனைக் காரணங்களாகக் காலம், இடம், கருவி, தொழில் முதலாயின என்ப்தும் பலரும் அறிந்த உண்மையாகும். இவையெல்லாம் நல்லனவாய்த் திருந்தும் மூலகாரனமாயுள்ள ஊழ் துணை செய்யாது இழவூழாயவழி நல்லவை யெல்லாம் தீயவாய் முடியும். மேற்குறித்த காலம், இடம், கருவி, தொழில் முதலிய துணைக்காரணங்கள் தியனவாயினும் ஆகலூழ் உற்றவழித் தீயனவும் நல்லனவாய் முடியும் என்பார்.

“நல்லவை யெல்லாஅந் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வஞ் செயற்கு” (திருக். 375)

என்றார். ஊழால் என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது.