பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

479


அழிக்கும் ஊழ் உற்றவழிக்காலம் இடம் முதலியன நல்லனவாயினும் எடுத்தசெயல் பயன் தராது அழியும். ஆக்கும் ஊழ் உற்றவழி காலம் முதலிய துணைக்காரணங்கள் தீயன வாயினும் ஆக்கம் உண்டாகும். ஆகவே காலம் முதலிய துணைக் காரணங்களையும் வேறுபடுத்தும் வன்மை ஊழுக்கு உண்டென்பது இதனாற் பெறப்படும்.

ஊழ்வயத்தால் தமக்குத் தொடர்பில்லாத பொருள்களை ஒருவர் எத்துணை வருந்திக் காத்தலும் அப்பொருள்கள் அவரிடத்துநில்லாது ஒழிந்து போகும். ஊழ் வயத்தால் தமக்கேயுரியவாய பொருள்களைக்காவாது புறத்தே கொண்டு போய்ச் சொரிந்தாலும் அவை அவர்களை விட்டு நீங்கமாட்டா. இவ்வுண்மை,

“பரியிலும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

சொரியினும் போகாதம” (திருக். 375)

என்ற குறளில் வலியுறுத்தப்பெற்றது. பரிதல் வருந்திக் காத்தல். பால் அல்ல ஊழால் தம்மொடு தொடர்பில்லாதன. தம - ஊழால் தம் நுகர்ச்சிக்கு உரியவாய பொருள்கள் உய்த்துச்சொரிதல் வீட்டிற் பாதுகாப்பாக வையாது புறத்தே கொண்டு போய்க்கொட்டுதல். மக்களிடத்தே பொருள்கள் நிலைத்துத் தங்குதற்கண் தங்காது அழிந்து போவதற்கும் முறையே அவற்றைக் காத்தலும் காவாமையும் காரணமாத லின்றி அவரவர்தம் ஊழ்வினையே காரணமாம் என்பது இதனால் உணர்த்தப்பட்டது.

இவ்வாறு பொருளின் ஆக்கத்திற்கும் அழிவிற்கும் ஊழ்தானே மூலகாரனமாதலை விளக்கிய திருவள்ளுவர் பொருள்களை ஈட்டுதற்கேயன்றி அவற்றை நுகர் தற்கும் ஊழின் துணை இன்றியமையாதது என்பதனை,

"வகுத்தா ன் வகுத்த வகையல்லாற் கோடி

தொகுத்தார்க்குந்துய்த்த லரிது’ (திருக். 377)

எனவரும் குறளில் தெளிவாகக் குறித்துள்ளார். “இறைவன் ஒவ்வோருயிர்க்கும் வகுத்தருளிய ஊழ்முறைமையானன்றிக்