பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கோடிக் கணக்கான நுகர்பொருள்களை முயன்று தொகுத்தார்க்கும் அவற்றை நுகர்தல் என்பது இயலாது” என்பது இதன் பொருளாகும். ஒருயிர் செய்த வினையின் பயன் பிறிதோறுயிரின் கட்செல்லாமல் (வினைசெய்த) அவ்வுயிர்களே வகுத்து நுகர்வித்தல் இறைவன் ஆணை யாதலின் அங்ங்ணம் வகுத்தளிக்கும் இறைவனை வகுத்தான்' என்ற பெயராற் குறிப்பிட்டார் திருவள்ளுவர். ஒருவரது வினையின் பயனாகிய ஊழ்வினை தானே யுருவெடுத்து வினைசெய்தாரைப் பற்றி நுகர்விக்கும் உணர்வும் ஆற்றலும் உடையதன்றென்றும் உலகினையும் உலகத்து எல்லாப் பொருள்களையும் ஒழுங்குபெற வகுத்து இயக்கியருளும் இறைவன் உயிர்கள் செய்த இருவினை கட்கேற்ப வகுத்த முறைமைதானே ஊழ் எனப்படு மென்றும் தெளிவுபடுத்தக் கருதிய திருவள்ளுவர் "வகுத்தான் வகுத்த வகை’ என்ற தொடரால் ஊழ்வினையாவது இதுவென விளக்கியுள்ளார். இத்தொடரில் வகுத்தான் என்னுஞ்சொல் இறைவனைக் குறிப்பதாகும். வகுத்தவகை என்றது இறைவனால் வகுக்கப்பட்ட நியதியாகிய ஊழினைக் குறிப்பதாகும். பகுத்தது பால் என வழங்கினாற்போல வகுத்தது வகை யென்றாயிற்று. தெய்வத்தின் இயல்பினைப் புலப்படுத்தக் கருதிய தொல்காப்பியனார் அதனைப் ‘பால்வரை தெய்வம்' என்ற தொடராற் சுட்டினமையும் தொல்காப்பியனார் கருத்துப்படி ஊழின் இயல்பினை விளக்கக்கருதிய திருவள்ளுவர் அதனை வகுத்தான் வகுத்தவகை' என்ற தொடராற் சுட்டினமையும் தெய்வத்தைக் குறித்தும் ஊழினைக் குறித்தும் முறையே தொல்காப்பியனாரும் திருவள்ளுவனாரும் கூறிய கருத்துக்கள் முன்னர் விளக்கப்பெற்றன.

வகுத்தான் வகுத்த வகை எனவரும் இத்தொடர்ப் பொருளைக் கூர்ந்து நோக்கின், இருவினைகளைச் செய்யும் உயிர்களும் அவ்வுயிர்களாற்செய்யப்படும் வினைகளும் அவ்வினைப் பயன்களாக உயிர்கள் நுகர்தற்குரிய இன்ப துன்பங்களாகிய நுகர்ச்சிகளும், இருவினைப்பயன்களை வினைசெய்த உயிர்களே பிறழாது நுகரும்படி நியமித்து நுகர்விக்கும் முதல்வனாகிய இறைவனும் என நான்கு