பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

485


'அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்” (திருக், 441)

"உற்றநோய்நீக்கியுறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொன்ல்’ (திருக். 442)

எனவரும் திருக்குறளால் உணர்த்தப்பட்டன.

சேர்ந்தாரது அறிவைத் திரித்து இம்மை மறுமை யின்பங்களைக் கெடுக்கும் காமம் வெகுளி மயக்கம் ஆகிய சிறுமை,யியல்பினரைச் சேர்தலாகாது என அறிவுறுத்துவது திருக்குறளிலுள்ள சிற்றினஞ்சேராமையென்னும் அதிகார மாகும். பெரியாரைத் துணையாகக் கொள்ளுதலால் வரும் நன்மையினை அறிவுறுத்திய திருவள்ளுவர் அவர்க்கு மாறாகிய சிற்றினத்தைச் சேர்தலால் உளவாகும் தீமையினைச் சிற்றினஞ்சேராமை யென்னும் அதிகாரத்திலும் விரித்துரைக் கின்றார். விசும்பின கண்ணே மழையுருவில் தன் தன்மைய தாய் நின்ற நீரானது நிலத்தொடு சேர்ந்தபொழுது தனது நிறம் சுவை முதலிய தன்மைகள் திரிந்து வேறுபட்டாற்போன்று தனிநிலைமைக்கண் தன்தன்மைத்தாய உயிரினது அறிவு பிறவினத்தோடு சேர்ந்த பொழுது அவ்வினத்தின் சார்பால் பண்பு தொழில் முதலிய வேறுபடும் என்பது திருவள்ளுவர் உயிரின் சிறப்பியல்பாகக் கண்டுனர்த்திய தத்துவ வுண்மையாகும். இந்நுட்பம்,

"நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்

கினத்தியல்பதாகும் அறிவு” (திருக். 452)

எனவும், 'இனத்தான் ஆம் இன்னான் எனப்படுஞ் சொல்'(திருக், 453) எனவும், இனத்துளதாகும் அறிவு (திருக். 454) எனவும், மனந்துய்மை செய்வினை தூய்மை யிரண்டும், இனந்துய்மை தூவா வரும் (திருக், 455) எனவும் வரும் திருவள்ளுவர் வாய்மொழிகளால் நன்கு தெளியப்படும்.

மக்கள் உயிர்வாழ்க்கையினை இம்மை (பிறப்பு), மறுமை (மறுபிறப்பு), அம்மை (பிறப்பறுநிலை) என மூவகையாகப் பகுத்துரைப்பர் அறிஞர். வையத்துள்