பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வாழ்வாங்கு வாழ்பவன்’ (திருக். 50) என்ற தொடரால் இம்மை வாழ்வைக் குறித்தார். இவ்வுலகிற் பிறந்தோர். நன்றுந்தீதும் ஆகிய இருவினைகளைப் புரிதலும் நல்லதன் பயனாகிய இன்ப நுகர்தற்குத் தேவருலகினையும் தீயதன் பயனாகிய துன்ப நுகர்தற்கு நரகத்தினையும் அடைந்து எஞ்சிய வினை காரணமாக மீளவும் பிறத்தலும் உடையர் என்பது இப்பரத கண்டத்தில் பன்னெடுங்காலமாகச் சான்றோர் அனைவரும் உடன்பட்டு வரும் தத்துவக் கொள்கையாகும். இன்பமே நுகரும் தேவருலகினைப் ‘புத்தேளிர் வாழும் உலகு (திருக்.58), புத்தேளுலகு (திருக். 213, 234), அவ்வுலகம் (திருக். 247) எனவும் துன்பமே நுகரும் நரகருலகினை 'இருள்சேர்ந்த இன்னாவுலகம் (திருக். 243), ‘ஆரிருள் (திருக்.121) எனவும் வானோர்க்குத் தலைவனாகிய இந்திரனை அகல் விசும்புளார் கோமான் இந்திரன்’ (திருக். 25) எனவும் திருவள்ளுவர் குறித்துள்ளார். உயிர்கள் தாவரம், ஊர்வன, நீர்வாழ்வன, விலங்கு, பறவை, மனிதர், தேவர் என்னும் எழுவகைப் பிறப்புக்களிலும் வினை வயத்தால் தொடரும் எழுமை முறையினவாய்ப் பிறப்பன என்பது, ‘எழுமை எழுபிறப்பும் (107) எழுபிறப்பும் தீயவைதீண்டா' (62) எனவும் வரும் திருக்குறள் தொடர்கள் பிறப்பு வகையினையும் வினைத்தொடர்பால் உளதாம் எழுமை யினையும் புலப்படுத்துவன.

'மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க

லுற்றாக்குடம்புமிகை’ (திருக். 345) ‘பற்றற்ற கண்ணே பிறப்பறு க்கும் மற்று

நிலையாமை காணப்படும்’ (திருக். 349) 'வீழ்நாள் படாஅமைநன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங்கல்’ (திருக். 38)

'யானெனெ தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்

குயர்ந்த வுலகம் புகும்' (திருக். 346), வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்’ (திருக். 362)

என்புழிப் பிறப்பறுநிலையே பேரின்பமாகிய வீடுபெறுதலும்