பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

491


எனவரும் திருக்குறள், உயர்வற வுயர்ந்த பேரின்பத்தை யடைதற்கு முயலவேண்டிய நீ பெண்ணொருத்தியை விரும்பிக் களவொழுக்கமாகிய இச்சிற்றின்பத்திற்கு முயலுதல் தகாது’ எனக்கூறிய பாங்கனை நோக்கித் தலைவன் ஒருவன் கூறுவதாக அமைந்ததாகும்.

“ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தம்மால் விரும்பப் பெறும் மகளிரின் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல, ஐம்புல நுகர்ச்சிகளைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மாலுலகம் வருந்தாமல் எய்துதற்குரியதாமோ” என்பது இதன் பொருளாகும். தாமரைக்கண்ணனாகிய செங்கண் மாலுலகம் உயர்வறவுயர்நல முடையனாகிய திருமால் வீற்றிருந்தருளும் நிலையில் அவன்பால் மெய்யன்புடைய அடியார்களாகிய அயர்வறும் அமரர்கள் அவனது திருமேனியழகில் இடைவிடாது திளைத்துமகிழும் நிலையில் அம் முதல்வனைக் கண் ணிமையாது கண்டு இன்புறும் இயல்பினதென்பதும், உறக்கத்தைவிட்டுத் தவயோகங்களால் வருந்திய பெருமுயற்சியுடைய பெரு மக்களே அதனைப் பெறுதற்குரியார் என்பதும், அத்தகைய இன்பம் உலகவாழ்க்கையில் திளைத்து மகிழும் ஏனையோரால் எளிதில் அடையத் தக்கதன்றென்பதும் இதனால் புலனாம். ஒத்த அன்புடைய தலைவியின் காதலின்பத்தில் திளைத்த தலைவன், அவன்பால் வைத்துள்ள இன்ப அன்பின் திறத்தைப் புலப்படுத்தும் நிலையில் தலைமகள் மென்றோளில் உறங்கிப்பெறும் காதலின்பத் தினும் செங்கண்மாலுலகத்து விழித்துப்பெறும் பேரின்பம் அத்துனைச் சிறந்ததாமோ எனச் செங்கண் மாலுலக இன்பத்தினை உவமையாகக் காட்டித்தான் பெறும் இம்மை யின்பத்தினை உயர்த்துக்கூறும் முறையில் திருமாலுலகத்து நித்திய சூரிகளாகிய அடியார்கள் பெறும் பேரின்ப நிலையினைத் திருவள்ளுவர் அத்திருக்குறளிற் சுட்டி யுள்ளமை கூர்ந்துணரத்தக்கதாகும். இனி இக்குறளில் “தாமரைக்கண்ணான் உலகு என்பதற்கு இந்திரனுலகு எனப் பொருள் கூறுவர் மனக்குடவர். வானோர் வேந்தனாகிய இந்திரன் ஐம்புலன்களிற் செல்லும் அவாவை அடக்கும் வலியற்றவனாய்க் கோதமமுனிவர் மனைவி அகலியையினை