பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

493


பேராவியற்கையாகிய பேரின்பநிலை யினையும் அதனையடைதற்குத் துணைபுரியும் முழுமுதற் பொருளாகிய இறைவனது இயல்பினையும் தாம் இயற்றிய உலகப் பொது மறையாகிய திருக்குறளில் சுருக்கமுந் தெளிவும் பொருந்த விளக்கியுள்ளமை ஒருவாறு விரித்துரைக்கப் பட்டது. சமயங்கடந்த நிலையில் நின்ற திருவள்ளுவர் விளக்கிய இறைவனியல்பு சைவசித்தாந்தம் கூறும் பொதுவும் உண்மையும் ஆகிய பதியிலக்கணத்துடன் பெரிதும் ஒத்து நிற்றலும் ஒருவாறு உணர்த்தப்பட்டது.

திருவள்ளுவர் ஆன்மாவை உள்ளம் எனவும் பரம் பொருளை உள்ளது (சத்து) எனவும் குறித்து வழங்கியுள்ளார் (திருக். 357). இம்மரபு சைவசித்தாந்த நூல்களிலும் தொடர்ந்து இடம் பெற்று வந்துள்ளது. திருவள்ளுவர் “செம்பொருள்” என்ற சொல்லால் வழங்கிய பரம் பொருளையே சைவசித்தாந்திகள் சிவம் என்னும் செந்தமிழ்ப் பெயராற் பரவிப் போற்றுகின்றனர் என்பது, செம்பொரு ளாய் சிவமெனலாமே (2573) எனவரும் திருமந்திரத்தாலும், “செம்பொருட்டுனிவே சிவபெருமானே’ (திருவாசகம்பிடித்தபத்து) என்னும் திருவாசகத் தொடராலும் நன்கு வலியுறுத்தப்பெற்றது. திருக்குறள் கடவுள் வாழ்த்தில்.

'மலர்மிசையேகினான் மாணடி சேர்ந்தார்’ (திருக். 3) ‘வேண்டுதல் வேணடாமையிலானடி சேர்ந்தார்க்கு”

(திருக். 4)

'தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க்கு (திருக்:7) 'அறவாழி யந்தனன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்த லரிது’ (திருக். 8)

என்றாங்கு வலியுறுத்தப்படும் இறைவனடி சேர்தலே வீடுபேறு என்னும் அடிசேர்முத்தியே சைவசித்தாந்தக் கொள்கையினரது முடிந்த முடிபாக அமைந்துள்ளமையும் இங்கு மனங்கொளத்தகுவதாகும். எனவே தென்னாட்டின் சிறப்புடைய தத்துவக்கொள்கையாகத் திகழும் சைவ சித்தாந்தக் கொள்கைகளுக்கு நிலைக்களமாகத் திகழ்வது