பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தமிழ் மறையாகத் தெய்வப்புலவர் அருளிய திருக்குறள் என்று கூறுதல் பெரிதும் ஏற்புடையதாகக் காணலாம். மேலை நாட்டுக் கிறித்துவப் பாதிரியாராகிய ஜி.யூ. போப்பையர் அவர்கள் 'திருவள்ளுவர் தாம் கூறும் அறநெறியை (சைவசித்தாந்தம் கூறும் பதி பசு பாசம் என்னும்) மாண்புடைய முப்பொருளுண்மையை அடியாகக் கொண்டு வகுத்துள்ளார் எனத்தம் துணிவினைப் புலப்படுத்தியுள்ளார். டாக்டர் ஜி.யூ. போப்பையர் அவர்கள் 'திருக்குறள் நுதலும் அறம்’ என்ற தலைப்பில் ஆற்றிய விரிவுரையில் இக்கொள்கை வலியுறுத்தப்பட்டது என்பதனை ஜே. எம். நல்ல சாமி பிள்ளையவர்கள் திருக்குறளிலுள்ள "மெய்யுணர்தல்” என்னும் அதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தெழுதிய கட்டுரையொன்றில் மேற்குறித்த போப்பையர் கருத்தை வெளியிட்டதுடன் 'உண்மையில் திருவள்ளுவர் கொள்கை புத்தர் சமனர் கொள்கைகளைப் போல் கடவுளின்மைக் கொள்கையன்று. இவ்வகையில் திருக் குறளுக்கும் நாலடிக்கும் வேறுபாடுளது (ஆங்கில நூல் பக்கம் 147) என எழுதியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தகுவதாகும்.