பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மேனின்று தான்சுரத்த லான்’ ‘பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் வீங்குநீர் வேலியுலகிற் கவன்குலத்தோடு ஓங்கிப் பரந்தொழுக் லான்’

எனவரும் மங்கல வாழ்த்துப் பாடலால் இளங்கோவடிகள் இவ்வியற்கைப் பொருளை வழிபட்டு முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தைத் தொடங்குகிறார்.

அடிகள் தம் காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய சமயங்களையும் அவற்றை மக்கள் மதித்தொழுகிய திறத்தையும் தம் நூலில் தெளிவாக விளக்குகின்றார். நானிலத்தவருள் ஒரு நிலத்தார் மற்றைய நிலத்தவருடன் சேர்ந்து தொழில்புரியும் நிலையேற்பட்ட பின்னர்த் தினைக்கருப் பொருளாகிய தெய்வ வழிபாடுகள் ஒருங்குநேர்ந்து வளரும் நிலைமையைப் பெற்றன. இத்திணை வகை வழிபாடுகளே பண்டைத் தமிழ்நாட்டில் சமய வளர்ச்சிக்கு அடிப்படையாய் அமைந்தன. இவ் வழிபாடுகள் வளர்ந்து சிறந்த நிலையினைச் சிலப்பதிகாரம் நன்கு விளக்குகின்றது.

குன்றக்குரவையில் குறிஞ்சி நிலத்தெய்வமாகிய முருகவேள் வழிபாட்டினையும், ஆய்ச்சியர் குரவையில் முல்லைநிலத் தெய்வமாகிய திருமால் வழிபாட்டினையும், இந்திரவிழஆரெடுத்த காதையில் மருதநிலத் தெய்வமாகிய இந்திர வழிபாட்டினையும், கானல்வரியில் நெய்தல்நிலத் தெய்வமாகிய வருணன் வழிபாட்டினையும், வேட்டுவ வரியில் முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல்பு இழந்த பாலைநிலத் தெய்வமாகிய கொற்றவை வழிபாட்டினையும் இளங்கோவடிகள் சிறப்பு முறையில் வைத்துப் பாராட்டுகின்றார்.

முருகன் வழிபாடு

அறுமுக ஒருவனாகிய முருகனுக்கு அஞ்சுடர் நெடுவேல் படையாக விளங்குவதென்றும், அவனது வேலை