பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

497


நிறுத்தி வழிபடும் கோயில் வேற்கோட்டம் என்னும் பெயருடையதென்றும், இத்தகைய வேற்கோட்டமும் இதனை யேந்திய பழந்தமிழ்த் தெய்வமாகிய அறுமுகச் செவ்வேள் எழுந்தருளிய அணிதிகழ் கோயிலும் சேவலைக் கொடியாக ஏந்தியவனென்றும், கோழிச்சேவற் கொடியோ னாகிய அப்பெருமானது கோயில் மதுரை நகரத்தே சிறப்புற்றுத் திகழ்ந்ததென்றும், மதுரை நகரத்தை யெரியூட்டி வையைக் கரையின் வழியாக மேற்கு நோக்கிச் செல்லும் கண்ணகியார்,

'கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்

கவுணரைக் கடந்து சுடரிலை நெடுவேல் நெடுவேள் குன்றம் அடிவைத்தேறி’

அக்குன்றத்தே வேங்கை மர நிழலில் குன்றவானர் கானக் கோவலனேர்டு வானவர் போற்றத் துறக்கம் புக்காரென்றும் இளங்கோவடிகள் கூறுகின்றார். மேற்காட்டிய தொடரில் முருகன் கிரவுஞ்சம் என்னும் மலையைப் பிளந்து கடல்நடுவே நின்ற சூர்மாவை வேலாற் கிழித்து அவுனர்களை வென்று அமரரைக் காப்பாற்றிய அருட்செயல் குறிப்பிட்டுள்ளமை காணலாம்.

திருச்செங்குன்றென்னும் மலையில் வேங்கை மரத்தின் நிழலிலே வந்து நின்ற கண்ணகியாரைக் கண்ட மலைவான ராகிய குறவர் மலைவேங்கை நறுநிழலில் வள்ளி போல்வீர்” என அவ்வம்மையை அழைக்கின்றார்கள். இதனால் குறவர் குலத்தில் தோன்றிய வள்ளி நாச்சியாரை முருகப்பெருமான் அருந்தமிழ்க் களவொழுக்க முறைப்படி மணந்து கொண்ட புராண நிகழ்ச்சியில் அக்குறவர்களுக் கிருந்த ஈடுபாடு நன்கு விளங்குகின்றது. கண்ணகியார் வானவர் போற்றக் கொழுநனொடும் வானகம் புக்க வியப்புடை நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த மலைவாணர் தம் மகிழ்ச்சி மிகுதியால் வரையுறை தெய்வமாகிய முருகவேளை வழிபட்டுச் சூர்மாவைக் கொன்ற வேலனையேந்திக் குரவைக் கூத்தாடும் இயல்பினை விளக்குவது குன்றக் குரவையாகும். முருகப்பெருமான் சிறப்புப்பொருந்திய திருச்செங்கோடு, வெண்குன்றென்னும் பெயருடைய சுவாமிமலை,

சை. சி. சா. வ. 32