பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


திருவேரகம் ஆகிய இத் திருப்பதிகளில் என்றும் நீங்காத கோயில் கொண்டு எழுந்தருளியிருத்தலையும் அப்பெருமான் முன்னொரு காலத்தில் கடல்நடுவிற் புகுந்து சூரபதுமனாகிய மாமரத்தை வேலால் தடிந்தருளிய அருட்செயலையும், அணி முகங்கள் ஓராறும் ஈராறு கையுமுடைய முருகவேள் பினிமுகம் என்னும் பெயருடைய மயிலின் மீது எழுந்தருளிப் பகைவர்களாகிய அவுனர்களை வென்ற திறத்தையும், சரவணப் பொய்கையில் தாமரை மலராகிய பள்ளியிடத்தே கார்த்திகைப் பெண்கள் அறுவராலும் பாலூட்டி வளர்க்கப் பெற்றவனாகிய அறுமுகப்பெரும்ான் திருக்கையிலேந்திய வேலே குருகு (கிரவுஞ்சம்) என்னும் பெயருடைய மலையைக் காவலாகக் கொண்டு அதனைச் சூழ்ந்து வரும் இயல்புடைய தாரகனாகிய அவுனனது மார்பகத்தையும் அம்மலையையும் பிளந்த தென்னும் வெற்றித் திறத்தையும் மலைவானர் மகளிர் எடுத்துரைத்துப் போற்றும் நிலையில் பின்வரும் பாடல்கள் அமைந்துள்ளன.

"சீர்கெழு செந்திலுஞ் செங்கோடும் வெண்குன்றும்

ஏரகமு நீங்கா விறைவன்கை வேலன்றே பாரிரும் பெளத்தினுள்புக்குப் பண்டொருநாட் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே. அணிமுகங்களோராறு மீராறு கையும் இணையின்றித் தானுடைய னேந்திய வேலன்றே பிணிமுகமேற் கொண்டவுனர் பீடழியும் வண்ண மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே. சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா ரறுவர் திருமுலைப்பா லுண்டான் றிருக்கைவே லன்றே வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே.”

இவை மூன்றும் குன்றக்குரவர் தம் கருத்து நிறைவேறும் வண்ணம் தெய்வத்தைப் பரவிய பாடல்களாம்.

தலைவனாலுளதாய தலைவியின் மெலிவுக்குரிய காரணத்தை ஆய்ந்து பாராத செவிலித்தாய், அம்மெலிவு கடம்பனாகிய முருகனால் உண்டாயதெனத் தவறாக