பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

முருகப்பெருமான், தன்னை அன்பினால் வழிபடும் அடியார்களின் முன் தோன்றியருளுங்கால் அவர்கள் அச்சமின்றிக் கண்டு வழிபடுதற்கேற்றவாறு தன் தெய்வத் தன்மையை உள்ளடக்கிக் கொண்டு மக்கள் வடிவில் இளையோனாக வந்து அருள்புரியும் இயல்பினையும் உடையான் என்பதனை,

'அணங்குசால் உயர்நிலை தழீஇப்பண்டைத்தன்

- e * ெ 9. த்து இள * تهrأجلنا

(திருமுருகு 289-290)

என்ற தொடரால் நக்கீரனார் குறிப்பாக அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வியல்பினை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத் தின்கண் சிறிது வெளிப்பட விளக்கிய திறம் இவன் கருதத் தகுவதாம். களவொழுக்கத்தில் இரவுக்குறியின் கண்ணே அடிக்கடி வந்து செல்கின்றான் தலைமகன். அவனை நோக்கித் தோழி கூறுவதாக அமைந்தது,

"கடம்பு குடியுடம்பிடியேந்தி

மடந்தை பொருட்டால் வருவ திவ்வூர் அறுமுக மில்லை அணிமயி லில்லை கடம்பூண் தெய்வ மாக தேரார் மடவர் மன்றவிச் சிறுகுடியோரே”

என வருங் குன்றக் குரவைப் பகுதி, "தலைவ, நீ தலைவியைப் பெறுதல் கருதிக் கடப்ப மலர் மாலையை யணிந்து வேற்படையைத் தாங்கிக்கொண்டு இரவில் இவ்வூர்க்கண் அடிக்கடி வந்து செல்வது, கண்டார் நின்னை முருகனெனக் கருதி ஆராயாது விடுவர் என்னுங் கருத்தினாலென அறிகின்றேன். கடவுளாகிய முருகன் நின்னைப் போன்று ஒரு முகமும் இரு கையும் உடைய தனது பழைய திருமேனியாகிய இளையவடிவுடனும் வருதல் கூடும் என்னும் உண்மையினை அறிந்து கொள்ள மாட்டாது. ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளுங் கொண்ட வடிவுடனன்றி முருகன் இத்தகைய