பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

503


மதுரைக்குப் புறப்பட்டார்கள் என இளங்கோவடிகள் கூறுகின்றார். கோவலன் என்னும் பெயர் திருமாலுக்குரிய திருநாமங்கள் பலவற்றுள் ஒன்று; அச்சொல் கோபாலன் என்னும் பெயரொடு ஒத்த பொருளுடையது. மதுரையில் கோவலனைக் கண்ட மாடலமறையோன் அவனைக் கோபால என அழைக்கின்றான். பரிபாடல் கோவல’ எனத் திருமாலைப் பரவுகின்றது. ஆகவே கோவலன் பிறந்த காலத்து அவனுடைய பெற்றோர்கள் திருமால் வழிபாட்டில் பற்றுடையவர்களாயிருந்தனர் என்பது பெறப்படுகின்றது. கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் புறப்படும்பொழுது மணிவண்ணப் பெருமாள் கோயிலை வலம் வந்தார்கள் என அடிகள் குறித்தலால் அவ்விருவர்க்கும் திருமால் வழிபாட்டில் பற்றுள்ளமை விளங்கும்.

இனி மதுரைக்குச் செல்லும் கோவலன் சோழநாடு கடந்து பாண்டி நாட்டெல்லையில் மாங்காட்டு மறையோனைச் சந்தித்த பொழுது அம்மறையோன் தனது யாத்திரையின் நோக்கத்தைக் கோவலனுக்குத் தெரிவிக்கின்றான்.

“நீலமேகமானது பொன் மலையின்மேல் பக்கங்களில் விரிந்து ஒருசேரப் படிந்தாற்போன்று ஆயிரந் தலையையும் அனுகுதற்கரிய வன்மையையுமுடைய பாம்பனைப் பள்ளியின்மேல் திருமகள் தங்கும் மார்பையுடைய திருமால் திரை தவழும் காவிரியாற்றின் இடைக்குறையாகிய திருவரங்கத்திலே பள்ளி கொண்டருளிய திருக் கோலத்தையும், திருவேங்கடமென்னும் மலையுச்சியின் மீதே ஞாயிறும் திங்களும் இரண்டு பக்கங்களிலும் விளங்க அவற்றின் நடுவே நீல மேகமானது தன் மின்னலைப் புத்தாடையாக வுடுத்துத் தன்னிடத்தேயுள்ள வானவில்லை ஆரமாகப் பூண்டு நின்றாற் போலச் சக்கரம் படையையும் சங்கினையும் அழகிய தாமரை மலர்போலும் வலக்கையிலும் இடது கையிலும் முறையே ஏந்தி அணிகிளரும் ஆரத்தை மார்பிற் பூண்டு பொன்னாடை யுடுத்துச் சிவந்த கண்களை யுடைய நெடியோனாகிய அப்பெருமான் நின்ற திருக் கோலத்தையும் எனக்குக் காட்டுவாயாக என்று என்னுடைய