பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

505


சரவணத்தில் மூழ்கினால் இந்திரானற் செய்யப்பட்ட ஐந்திர வியாகரனத்தை உணரலாம் என்றும், பவகாரணியில் மூழ்கினால் பழம் பிறப்பையுனரலாமென்றும், இட்ட சித்தியில் ஆடினால் நினைத்ததெல்லாம் பெறலாம் என்றும் கூற, அப்பிலத்துக்குள்ளே நுழைய விரும்பினால் சிலம்பாற்றின் கரையில் அமைந்த கோங்கமரநிழலின் கண்ணே இயக்கியாகிய ஒருத்தி தோன்றி, இப்பிறப்பிற் கின்பமும் மறுபிறப்பிற்கின்பமும் இவை இரண்டுமொழிந்து எக்காலத்தும் ஒன்றாந் தன்மையாய்த் திறம்பாது அழிவற நிற்பதுமாகிய பொருள்கள் யாவை? என் பெயர் வரோத்தமை, இவற்றையுரைத்தார்க்கு யானுரியேன் ஆதலின் திருவுடையீர்நீவிர் உரைத்திராயின் இப்பில வாயிற் கதவம் திறந்து தருவேன்’ என்று கூறுவாள். அவள் கேட்ட வினாவுக்கு மறுமொழி கூறின், அவள் கதவைத் திறந்து வழி விடுவாள், அவ்வழியே நீண்ட இடைகழிகள் பல உள்ளன. அவற்றைக் கடந்தால் இரட்டைக் கதவுடைய வாயிலொன்று தோன்றும். அதற்கு மேலாகச் சென்றால் மற்றொருத்தி தோன்றி ஈறில்லாத இன்பம் யாது? அதனை உரைத்திராயின் நீங்கள் இம்மூன்று பொருளினும் விரும்பிய பொருளைப் பெறுவீர்” என்பாள். அவ்வாறு வினவிய அவள், 'யான் கேட்டதற்கு நும் பேதைமையான் மறுமொழி கூlராயினும் நூம்மை வருத்தம் செய்யேன், நீங்கள் போதற்குரிய வழியிலே செலுத்துவேன்’ என்பாள். அவள் கேட்ட பொருளை உரைத்தாருளராயின், முற்கூறிய பொய்கைக் கரைகளிலே, அவர்களைச் செலுத்தி அவற்றைக் காட்டி மீள்வாள். அருமறையிடத்தே ஐந்தெழுத்தாலும் எட்டெழுத்தாலும் ஒதப்பட்டு வருகிற மந்திரமிரண்டையும் ஒருமையுடன் மனத்தால் நினைந்து வாக்கினால் துதித்து அப்பொய்கை மூன்றனுள் நீங்கள் விரும்பிய பொய்கையில் முழுகினால் அவற்றால் வரும் பயன் தவத்தால் முதிர்ந்தவர்களாலும் கானத் தகுவன அல்ல. அப்பொய்கைகளின் பயனை நீங்கள் விரும்பாவிட்டால் அம்மலை மீது நின்றோனுடைய பொலிவு பொருந்திய தாமரை மலர் போலும் பாதங்களை நினைந்து வழிபடுவீராக. அப்பொழுதே அவனது கருடப்புள் எழுதிய கொடிமரம் நிற்குமிடத்தைக் காண்பீர்கள். கண்டபொழுதே அவன் திருவடிநிலை நும்மை எடுத்துக்கொண்டு பிறவித்