பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

511


நெய்தல் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டமை விளங்கும்.

கொற்றவை

பாலைக்குத் தெய்வம் கொற்றவை என்பதனை இளங்கோவடிகள் வேட்டுவ வரியில் விரித்துரைத்துள்ளார். கொற்றவை வழிபாடு ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திலேய்ே சிறப்புற்று விளங்கியதாகும். 'சிறந்த கொற்றவை நிலை’ என்பது தொல்காப்பியம். கொற்றவைக்குப் பழையோள் என்று ஒரு பெயருண்டு. எனவே தெய்வத்தைத் தாயாகக் கருதி வழிபடும் இவ்வழிபாடு மிகமிகப் பழைமையுடையதென்பதும் துணியப்படும். இக்கொற்றவை வழிபாடு சிவ வழிபாட்டுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய தென்பதையும் முல்லைநில வழிபாடாகிய திருமால் வழிபாட்டினைத் தனக்கு அங்கமாகக் கொண்டதென்பதையும், முருகவேள் வழிபாட்டுடன் சம்பந்தமுடையதென்பதையும் இளங்கோ வடிகள் வேட்டுவவரியில் நன்கு விளக்குகின்றார்.

'மதியின் வெண்டோடு சூடுஞ் சென்னி

வலம்படுகொற்றத்து வாய்வாட்.கொற்றவை'

எனவரும் த்ொடரில் இறைவன் பிறை சூடியதனைக் கொற்றவை மேல் ஏற்றிக் கூறினார். நெற்றிக் கண்ணுடைமை, நஞ்சுண்டு கண்டங்கறுத்தமை, நாகம் நானாக மேரு' மலையை வில்லாக வளைத்தமை, திரிசூலமேந்தினமை, பெண்பாகத்திற் சிலம்பும் ஆண்பாகத்திற் கழலும் அமைய மங்கைபாகரானமை ஆகிய இவை யாவும் பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக்கு உரியனவாம். அப்பெருமானுடன் பிரிப்பின்றி உடனாதல் பற்றி - இச்செயல்களெல்லாவற்றையும் சத்தியாகிய சொற்றவையின் மேலேற்றிச் சிலப்பதிகாரம் போற்றுகின்றது.

எருமையின் தலையும் அவுனன் உடம்பும் பெற்ற மகிடாசுரன் தலைமீது நின்ற வெற்றித் தெய்வமாகிய கொற்றவையைத் திருமாலின் தங்கையென அடிகள் பாராட்டியுள்ளார்.