பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

515


பெரியோன் எனவும் சிலப்பதிகாரம் அருந்தெறற் கடவுள் எனவும் நுதல்விழி நாட்டத்திறையோன் எனவும் சிவபெருமான் ஒருவனையே அடிகள் முதலில் வைத்துப் போற்றுதலை நோக்குங்கால், அவர் காலத்தில் தமிழ் நாட்டிலே பெரும்பான்மை மக்களால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புடைய வழிபாடு சிவ வழிபாடென்பது நன்கு

செங்குட்டுவன், அருந்தமிழ் இகழ்ந்த ஆரிய அரசரை வெற்றி கோடல் கருதி இமயஞ் செல்லப் புறப்பட்டபொழுது. திங்களைச் சூடிய நீண்ட பெருஞ் சடைமுடியினையும் உலக முழுவதனையும் தன்னுள் அடக்கிய திருவுருவத்தினையும் உடைய யாவர்க்கும் உயர்ந்தோனாகிய சிவபெருமானுடைய திருவடிகளை வெற்றி பொருந்திய வஞ்சி மாலையுடன் தன் முடி மீதணிந்து எவர்க்கும் தாழாத தலையால் அப்பெருமானை இறைஞ்சிப் போற்றி, அந்தனர் ஏந்திய வேள்விப்புகை தன் மார்பில் அணிந்த மாலையின்கண்னே புகுந்து மணங்கமழப் பட்டத்து யானை மீதமர்ந்து போந்தான் எனவும், அந்நிலையில், குடதிசைக் கோவாகிய செங்குட்டுவன் வெற்றி பெறுவானாக’ என வாழ்த்திக் .ெ காண்டு ஆடகமாடம் என்னும் திருக்கோயிலில் அறிதுயில் கொள்ளும் திருமாலின் பிரசாதத்தைக் கையிற் கொண்டு திருமாலடியார் சிலர் செங்குட்டுவனை ஏத்தி நின்றனர் எனவும், அதனை உணர்ந்த வேந்தர் பெருமான் கங்கையைச் சடையிற் கரந்தருளிய செஞ்சடைக் கடவுளாகிய சிவபெருமானுடைய அழகிய திருவடிகளைத் தன் தலைமேற் புனைந்திருத்தலால் திருமாலின் பிரசாதத்தை வாங்கித் தன் தோள்களிற் புனைந்து சென்றான் எனவும் இளங்கோவடிகள் கூறுகின்றார்.

நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து இறைஞ்சாச் சென்னி யிறைஞ்சி வலங்கொண்டு மறையோ ரேந்திய வாகுதி நறும்புண்க நறைகெழு மாலையி னல்லகம் வருத்தக்