பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கடக்களி யானைப் பிடர்த்தலையேறினன் குடக்கோக்குட்டுவன் கொற்றங் கொள்கென ஆடகமாத்தறிதுயில் அமர்ந்தோன் சேடங் கொண்டு சிலர்தின் றேத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் ஆங்கது வாங்கியணிமணிப் புயத்துத் தாங்கின னாகித் தகைமையிற் செல்வழி

(கால்கோட்காதை 54-67)

எனவரும் தொடர்களால் அடிகள் இச்செய்தியை

விளக்கியுள்ளார். அங்ங்ணம் செல்லும் செங்குட்டுவனை

நோக்கி இமயத்தினின்றும் வந்த முனிவர்கள்,

செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ:

என அழைக்கு முகமாக அவ்வேந்தன் சிவபெருமான் திருவருளாற் பிறந்த சிறப்பினைக் கூறுதலாலும், அவ்வேந்தனை நோக்கி

ஆணேறு ர்ந்தோன் அருளினில் தோன்றி மாநிலம் விளக்கிய மன்னவன்

என மாடல மறையோன் கூறுதலாலும், செங்குட்டுவ னுடைய முன்னோர்களாகிய சேரவேந்தர்களும் அவர்கள் வழியிற்றோன்றிய அவ்வேந்தர் பெருமானும் சிவவழிபாட்டில் அழுந்திய பற்றுடையோராய் விளங்கினமையும் இனிது விளங்கும்.

செங்குட்டுவன் செய்த போரில் எதிர் நிற்ற லாற்றாராகிய மன்னர், சடைமுடியுடையராய் உடல் முழுதும் முழுநீறு பூசிய சிவனடியாராகவும், மயிற் பீலியைக் கையிலேந்திய சமண நோன்பிகளாகவும் பாடும் பாணராகவும் ஆடுங்கூத்தராகவும் தாந்தாம் கற்று வல்ல தொழில் நிலைக்கேற்ப வெவ்வேறு கோலமணிந்து தப்பிப் பிழைத்தார்கள் எனவும் வெற்றி பெற்ற செங்குட்டுவன்,