பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

517


‘வடதிசைக் கண்னே மறைகளைப் பாதுகாக்கும் அந்தன ருடைய வேள்விக் குண்டத்தின் முத்தியை அவியாது பேனும் பெரிய அருள் வாழ்க்கையைப் போற்றிப் பாதுகாத்திடுமின் எனத் தூதர்க்குச் சொல்லி வில்லவன் கோதை முதலிய படைத்தலைவர்களை ஏவி இமயமலையிலே கண்ணகியார் வடிவமைத்தற்குரிய சிலையினைக் கொண்டான் எனவும் இளங்கோவடிகள் கூறுதலால் அவர் காலத்து வடநாட்டில் சிவவழிபாடும் சமணசமயமும் வைதிக வேள்வி முறைகளும்மேற்கொள்ளப் பெற்றமை நன்கு விளங்கும்.

ஆரிய மன்னரை வணங்கி வஞ்சி நகரத்தையடைந்த செங்குட்டுவன், தன் பட்டத்தரசி இளங்கோ வேண்மா ளுடன் ஒருங்கு வீற்றிருந்த காலத்துப் பறையூர் என்னும் ஊரிற் பிறந்த கூத்தச் சாக்கையன் என்பான், எல்லாச் செல்வங்களுக்கும் நிலைக்களனாகிய சிவந்த திருவடியிலே சிலம்பென்னும் காலணி ஒலிக்கவும், சிவந்த கையின் கண்ணே துடியென்னும் பறை முழங்கவும், சிவந்த நிறமுடைய கண்கள் அன்பராயினார்க்கு ஆயிரந்திருக் குறிப்புகளைப் புலப்படுத்தியருளலும் செந்நிறமுடைய சடைக்கற்றைகள் திசை முழுதும் பரந்து அலையவும், உமாதேவியார் தாமணிந்த பாடகம் ஒலிக்காமலும் தோள்வளைகள் நடுங்காமலும் காதணி அசையாமலும் கூந்தல் அவிழாமலும் தன் இடப்பாகத்தே அமையவும் பெரியோனாகிய சிவபெருமான் ஆடிய 'கொடு கொட்டி’ யென்னும் கூத்தை ஆடிக்காட்டினன். இச்செய்தியை,

திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும் பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவும் செங்கணாயிரந் திருக்குறிப்பருளவும் செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும் பாடகம் பதையாது சூடகந்துளங்காது மேகலை யொலியாது மென்முலையசையாது வார்குழை யாடாது மணிக்குழல் அவிழாது உமையவள் ஒருதிறனாகவோங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்

எனவருந் தொடரால் இளங்கோவடிகள் விளக்குகின்றார்.