பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

519


ருடையான் என்றும், நெற்றிக் கண்னுடையான் என்றும், உமையை ஒரு பாகத்திற்கொண்ட அம்மையப்பன் என்றும், ஆலின் கீழ் அறமுரைத்தருளிய ஆசான் என்றும், முருகவேட்குத் தந்தையென்றும், நஞ்சுண்டு கண்டத் தடக்கித் தேவர்களை உய்வித்த பேரருளாளன் என்றும், உமையவள் காண ஆடினான் என்றும், திரிபுரத்தை எரித்தருளியவன் என்றும், திருக்கயிலையில் வீற்றிருப்பவன் என்றும், அவனே அட்டமூர்த்தியாகிய உலகு பொதி யுருவத்து உயர்ந்தோன் என்றும், அவனது வழிபாடு சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர் நாட்டிலும் பெருக வழங்கியது என்றும், வடநாட்டிலும் பரவியிருந்தது என்றும், இமயமலையின் உச்சியிலே குயிலாலுவம் என்னுமிடத்தே உமையொரு பாகனாகிய இறைவனுக்குத் திருக்கோயில் அமைந்திருந்ததென்றும் அடிகள் விளக்கிய திறம் அறியத் தகுவதாகும்.

பிற தெய்வங்கள்

பலதேவன் : கண்னனுக்கு முன்னோனாகிய பலதேவனை வால்வளைமேனி வாலியோன் எனவும், புகர் வெள்ளை எனவும் குறிப்பிட்டு அத்தெய்வத்துக்குரிய கோயில் புகார் நகரத்திலும், மதுரையிலும் அமைந் திருந்ததனை அடிகள் கூறியுள்ளார்.

காமன் : திருமாலுக்கு மகனாகிய காமனைக் காமக் கடவுள், மகர வெல்கொடி மைந்தன், மகரத்தின் கொடியோன், மீனேற்றுக் கொடியோன், உருவிலாளன் எனக்குறித்த அடிகள், காவேள் கோட்டம் காவிரிப்பூம் பட்டினத்தில் அமைந்திருந்ததனையும், காமன் தன் மகன் அதிருத்தன் பொருட்டு வாணன் பேரூரில் பேடிக் கூத்தாடிய இயல்பினையும் குறித்துள்ளார். காமனுக்குக் கரும்பு வில்லென்றும்,தென்றலும் குயிலும் துணைசெய்வன வென்றும் மகளிர் காமன் சேனையென்றும் சிலப்பதிகாரம் கூறும்.

ஞாயிறு : 'பலர் தொழத் தோன்றிய உலகுதொழு