பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


4ల్లో சைவ சிக்காந்த சாத்திர வரலாறு

"ஒட்டிய சமயத்துறுபொருள் வாதிகள்

பட்டி மண்டபம் பாங்கறிந்தேறுமின்”

என வரும் மணிமேகலைத் தொடரால் இனிது புலனாகின்றது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து முன்னர் இல்லாத சமயப் பகுப்புக்களும் மத மாறுபாடுகளும் இததென்றமிழ் நாட்டிலே தோன்றித் தமிழ் மக்களது ஒற்றுமையுணர்வைச் சிதைத்து அவர்களை ஒருவரோ டொருவர் மாறுபடச் செய்து அலைக்கழிக்கலாயின.

அசோகவேந்தன் காலந்தொடங்கிக் கி. பி. முதல் நூற்றாண்டு வரையில் ஏறக்குறைய முந்நூறாண்டுகள் தமிழகத்தில் குடியேறி இந்நாட்டு மக்களோடு ஒன்றி அமைதியாய் வாழ்ந்த புத்த சமணத துறவிகள், பாண்டிய நாட்டிலும் சோழ நாட்டிலும் தமிழ் வேந்தரது அரசுநிலை குலையத் தொடங்கிய நிலயில் தமிழ் நாட்டின் மேற் படையெடுத்துவந்த அயலவராகிய கருநட மன்னர் முதலியோரது துனைகொண்டு தம் சமயக்கொள்கைகளை மிக முயன்று தமிழகத்திற் பரப்பும பணியில் ஈடுபடலாயினர்; தமது கொள்கைக்கு இனங்காத தமிழ் மக்களையெல்லாம் தம்மதங்களில் திருப்புதற்கு அரசியற் சார்பு பெற்றுத் தீய முறைகளையெல்லாம் கையாள்வாராயினர். இதனால் தமிழாசிரியர்க்கும் சமன புத்த சமயத்தார்க்குமிடையே வழக்குகளும் எதிர் வழக்குகளும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. அதனால் ஒருசார் கொள்கையினையுடையார் பிறிதொரு கொள்கையாளரிடமிருந்து தம்மை வேறுபடுத்துத் தம்மை உயர்த்திக் கோடற்கும் தம் கொள்கையினை யுடன்படாத பிறரைத் தம்மினின்று வேறுபிரித்துக் காட்டுதற்கும் சைவர், வைணவர், புத்தர், சமணர், வைசேடிகர், நியாயவாதிகள், உலகாயதர், மாயாவாதிகள் என்றாங்கு வெவ்வேறு குழுவினர்க்கு வெவ்வேறு சமயப் பெயர் கொடுத்து வழங்கும் நிலை சமயவாதிகளிடையே நிலைபெற வேரூன்றலாயிற்று. சமயம், மதம் என்ற பெயர்களும் அப்பெயர்களாற் பகுத்துரைக்கப்படும் பிரிவினைகளும் இன்றி எல்லோரும்

39. மணிமேகலை, 160 - 61.