பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

523


கோவலன் தீவினையாற் கொல்லப்பட்டு இறந்த கடுந்துயர் கேட்டுத் துயரமுற்றவர்களுள் கோவலன் தந்தை மாசாத்துவான் என்பான், தன் பெரும்பொருளைத் தானம் செய்து விட்டு இந்திரவிகாரமாகிய புத்தர் கோயிலை வனங்கித் துறவு மேற்கொண்டான் என்றும், கண்ணகியின் தந்தையாகிய மாநாய்கன் என்பான், தன் பொருளைத் தானம் செய்துவிட்டுச் சமண சமயத்தின் பகுதியாகிய ஆசீவக சமயத்தைச் சார்ந்து துறவு மேற்கொண்டான் என்றும் சிலப்பதிகாரம் கூறும். இக்குறிப்புக்களால் சமண புத்த சமயங்கள் தமிழ்நாட்டில் பரவி நிலைபெறத் தொடங்கிய காலம் இளங்கோவடிகள் வாழ்ந்த காலமேயென்பது நன்கு தெளியப்படும். சமண சமயத்தார் தமிழ் நாட்டில் தங்கள் சமயத்தைப் பரப்ப நேர்ந்த பொழுது அவர்கள் வருவதற்கு முன் இத்தமிழ் நாட்டிலே குடிபுகுந்து வேதநெறியைப் பரப்பிய வைதிகர் கொள்கையைச் சமயம் நேர்ந்த பொழுதெல்லாம் மறுத்துரைக்கத் தவறியதில்லை. இச்செய்தி கவுந்தியடிகள் மாங்காட்டு மறையோனை நோக்கி அவன் கூறிய தீர்த்தச் சிறப்பையும் தெய்வ வழிபாட்டையும் வன்கண்மையாக மறுத்துரைத்தமையாற் புலனாகும்.

இவ்வாறு வேதநெறிக்குத் தடையான புறச்சமயங்கள் தலையெடுத்த இக்காலத்தே வைதிக நெறியைப் பேணுதலையே தொழிலாகவுடைய வேதியர்கள் சோம்பி யிருந்துவிடவில்லை. அவர்கள், வட இமயம் முதல் தென் குமரி வரை தீர்த்த யாத்திரை சென்று நாட்டு மக்களையும் நாடாள் வேந்தரையும் கண்டு வேத நெறியினை விரித்துரைத்து அவர்களால் பெரிதும் ஆதரிக்கப்பெற்றுத் தமக்குரிய வேத வேள்விகளையும் நெகிழ விடாது நிலை நாட்டியுள்ளார்கள். இச்செய்தியினை மாடலன், மாங்காட்டு மறையோன், பராசுரன் என்னும் மறையவர்களின் செயல் மூலமாக இளங்கோவடிகள் தம் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

இந்த நாட்டில் புதிய புதிய சமயங்களை வரவேற்று ஆதரிக்கும் மக்களுக்குள் வணிகர் முதலிடம் பெற்றுள்ளனர். அவர்கள் கடல் கடந்து வெளி நாடெங்கும் சென்ற் பல சமய