பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மக்களோடும் அளவளாவி அவர்களோடு கொண்டும் கொடுத்தும் வாணிகம் செய்யும் இயல்புடையோராதலின் அவர்கள் எல்லாச் சமயங்களையும் ஆதரிக்குமுகத்தால் அவ்வச் சமய மக்களுடன் அன்பினாற் கலந்து உறவாடி யுள்ளனர்.

இச்செய்தியைக் காவிரிப்பூம் பட்டினத்து வணிக னாசிய கோவலன் குடும்பத்தில் வைத்து இளங்கோவடிகள் தெளிவுபடுத்துகின்றார். கோவலன், பெயரால் திருமால் சமயத்தவன். கொள்கையால் சாவகநோன்பி (சமனரில் இல்லறத்தான்). வேதியர்களுக்குப் பொன்னும் பொருளும் தந்து ஆதரித்தமையால் வைதிக சமயத்தில் ஈடுபாடுடையவ னாய்த் தோன்றுகின்றான். கொற்றவை மந்திரத்தைச் செபிக்கும் இயல்பினால் சிவசமயத் தொடர்புடையவனாகக் காணப்படுகின்றான்.

கோவலன் கொலையுண்டமைக்கு ஆற்றாது கண்ணகியின் தந்தை மாநாய்கன் ஆசீவகமாகிய சமன சமயத்தைச் சார்கின்றான். கோவலன் தந்தை மாசாத்துவான் புத்த சமயத்தைச் சார்கின்றான். கோவலன் காதற்கிழத்தி யாகிய மாதவியும் அவள் மகள் மணிமேகலையும் புத்த சமயத்தைச் சார்கின்றனர். இச்செய்திகள் யாவும் வணிக குடும்பத்தில் அக்காலத்தமைந்த சமயவுரிமையை நன்கு புலப்படுத்துகின்றன.

இவ்வாறு தமிழகத்தே பல்வகைச் சமயங்கள் நிலவினவாயினும், தமிழ் வேந்கர்கள்மட்டும் பிறவாயாக்கைப் பெரியோனாகிய இறைவனை வழிபடும் உறுதியில் தவறாது, ஏனைச் சமயங்களையும் நடுநிலையில் நின்று ஆதரித்து வந்துள்ளார்கள். ஆனேறுயர்த்தோன் அருளால் சேரர் குடியில் தோன்றிய செங்குட்டுவனுக்குத் தம்பியாகிய இளங்கோவடிகள் தம் தெய்வக் கொள்கையில் சிறிதும் பிறழாத உள்ளமுடையவராய்ச் சமயவாதிகள் கருத்தின்வழிச் செல்லாது தம் காலத்தே நிலவிய உலகியல் வாழ்க்கையை உள்ளவாறு எடுத்துரைத்துள்ளார். அதனால் எல்லாச் சமயத்தவராலும் தம் தம் சமயத்தவரெனப் பாராட்டிப்