பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

525


போற்றும் ஆசிரியர் திருவள்ளுவரைப் போன்று சமயப் பொது நோக்குடையவராகத் திகழ்கின்றார்.

அரச நீதியில் தவறியவர்களை அறக்கடவுள் வருத்து மென்பதும், புகழமைந்த பத்தினிப் பெண்களை மக்களே யன்றித் தேவரும் போற்றுவர் என்பதும், ஒருவன் ஒரு பிறப்பிற் செய்த வினைப்பயன் அவனை நிழல் போல் தொடர்ந்து வந்து மறுபிறவியிலும் வருத்துமென்பதும் ஆகிய இம்மூன்று உண்மைகளையும் கருவாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலின் உறுதிப் பொருளாகிய இம்மூன்று பொருள்களிலும் புகழமைந்த பத்தினியை மக்களே யன்றித் தேவரும் போற்றுவர் என்ற கருத்தே நடுநாயகமாக ஆசிரியரால் எடுத்துரைக்கப் பெறுகிறது. எனவே பத்தினிப் பெண்டிரைத் தம் தெய்வமாகக் கொண்டு வழிபடும் வழிபாட்டு முறையினைப் பரப்புதற்குத் தோன்றிய நூலே இச்சிலப்பதிகாரம் என்பது பெறப்படும்.

மதுரை நகரத்திற்குப் புறப்பட்டுச் செல்லும் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளுடன் வேட்டுவர் வாழும் சிற்றுரிலே கொற்றவை கோயிலில் தங்கி யிருக்கிறார்கள். அப்பொழுது அவ்வூரில் கொற்றவைக்குத் திருவிழா நடைபெறுகிறது. அவ்விழாவிலே கொற்றவை கோலங்கொண்டு நின்ற வேட்டுவப் பெண்ணாகிய சாலினியின்மேல் அத்தெய்வம் ஆவேசித்து, மலர் போலும் பாதங்கள் வழிநடையால் தளர்ந்து வருந்த, அவ்வருத்தம் தீரும்படிக் கணவனுடனே இருந்த கண்ணகியைப்பார்த்து, 'இங்கிருக்கின்ற இவள் கொங்குநாட்டினை ஆளும் செல்வி, குடநாட்டினை ஆளும் பாவை, தென்றமிழ் நாடாகிய பெண் செய்த தவப்பயனால் முளைத்த கொழுந்து போல்வாள். இவ்வுலகிற்கு முழு மாணிக்கம் போன்று, உயர்ச்சி பெற்ற பெண்ணுருக் கொண்டதோர் திருமணி’ எனப் பாராட்டிப் போற்றுகின்றது.

“கணவனே டிருந்த மணமலி கூந்தலை

இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்றமிழ்ப்பாவை செய்ததவக் கொழுந்து ஒருமா மணிய யுலகிற் கோங்கிய