பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

527


அவர்களாற் பாராட்டிப் போற்றப் பெறுவார்கள் என்பதனையும்,

"தெய்வந்த தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப்பெய்யு மழை” (திருக். 55)

“பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு" (திருக்.58)

எனவரும் குறள்களால் தெய்வப்புலவர் அறிவுறுத்துகின்றார். திருவள்ளுவர், வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்திற் கூறிய கற்பென்னும் திண்மையுடைய மகளிர்க்குரிய நற்குண நற்செய்கைகள் யாவும் கண்ணகியார்பால் நன்கமைந்த திறத்தைச் சிலப்பதிகாரம் பலவிடங்களிலும் விரித்துரைக் கின்றது.

தேவந்தியென்னும் பார்ப்பனத் தோழி கணவனைப் பிரிந்து வருந்திய கண்ணகியை அடைந்து, ‘சோமகுண்டம் சூரியகுண்டம் என்னும் தீர்த்தங்களில் மூழ்கிக் காமவேள் கோயிலைத் தொழுதவர்கள் இப்பிறப்பில் தம் கணவரோடு பிரியா வாழ்க்கையைப் பெறுவதோடு மறுபிறப்பிற் போக பூமியிலும் போய் இன்புறுவார்கள். ஆதலால் நாம் ஒருநாள் அத்தீர்த்தங்களில் ஆடுவோம்’ என்று கூற அது கேட்ட கண்ணகியர், அது பெருமையுடைய செயலன்று என மறுத்துக் கூறுகின்றார். இவ்வாறு கண்ணகியார் தம் கணவனைத் தவிர வேறு தெய்வம் தொழா உள்ளத்து உறுதியினால் அழற்கடவுளும், மதுராபதியும், வானோரும் வனங்கும் சிறப்புற்ற திறத்தை,

శశ

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதாற் - றெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய் கண்ணகி

விண்ணகமாதர்க்கு விருந்து” (கட்டுரை காதை)

என்னும் வெண்பாவினால் அடிகள் வற்புறுத்துரைக்கின்றார்.

தம்நாட்டின் வளர்ச்சி குறித்தும் தம்மையாதரித்த வேந்தர்க்குச் செஞ்சோற்றுக் கடன் கழித்தற் பொருட்டும்