பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


போர்க்களத்தே பகைவரொடு பொருது வெற்றி தந்து உயிர் துறந்த தறுகண் வீரர்களின் புகழைக் கல்லிலே எழுதி, அக்கல்லை தட்டுத் தெய்வமாக வழிபடும் வழக்கம் நம் தமிழ்நாட்டில் தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்டு நிலவிவரும் பழைய வழக்கமாகும். இத்தகைய நடுகல் வழிபாடு சங்கத்தொகை நூல்களிற் பலவிடங்களிலும் குறிப்பிடப்படுகின்றது. போர்க்களத்தில் இறந்த வீரரைத் தெய்வமாக நிறுத்தற்குரிய கல்லினைக் காணுதலும், அவ்வாறு காணப்பட்ட கல்லைக் கொள்ளுதலும், அதனை நீரில் அமிழ்த்தித் தூய்மை செய்தலும், அதனைக் குறித்த இடத்தில் நடுதலும், அவ்வாறு நாட்டிய கல்லிற்குக் கோயிலெடுத்துப் படைத்து வணங்குதலும், அக்கல்லில் உறையுந் தெய்வத்தின் புகழ் கூறி வாழ்த்துதலும் என ஆறு பகுதியாக இவ்வீரர் வழிபாடு நிகழுமென்பதனை,

“காட்சி கால்கோல் நீர்ப்படை நடுதல்

சீர்த்தகு மரபிற் பெரும்படை வாழ்த்தலென்று இருமூன்று மரபிற் கல்”

எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் அறியலாம்.

இவ்வாறு தறுகண்மை மிக்க வீரர்களுக்குச் செய்யும் இவ்வழிபாட்டினைக் கற்பென்னும் திண்மையால் மன்னவன் முன் வழக்குரைத்து வென்று கனவற்குற்ற பழிதுடைத்து மதுரையைத் தீக்கிரையாக்கிய வீரபத்திலளியாகிய கண்ணகியார்க்கும் செய்யவேண்டுமென எண்ணியவர்கள் சேரவேந்தனாகிய செங்குட்டுவனும் அவன் மனைவி வேண்மாளுமாவார். அவர்களது நல்லுளத்தால் தொடங்கிய இப் பத்தினி வழிபாடு சேரநாட்டிலேயன்றித் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மாளுவ நாட்டிலும் கடல்சூழ்ந்த இலங்கையிலும் பரவி நிலைபெற்ற வரலாற்றினை இளங்கோவடிகள் தம் நூலில் திறம்பட விளக்குகின்றார்.

இதுகாறும் கூறியவற்றால் கற்புடையமகளிரைத் தெய்வமாக எண்ணிக் கோயிலெடுத்து வழிபடும் வழக்கம் இளங்கோவடிகள் காலத்திலேதான் சிறப்பு முறையில் நிலைநாட்டப்பட்டதென்பதும், கண்ணகியார்க்குக்