பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

45


ஒன்றுபட்ட பொதுமையுணர்வினராய், எல்லாம் வல்ல ஒரு முழுமுதற் கடவுளையே பல்வேறு வடிவிற் பல்வேறு பெயர்களில் வணங்கிக் கொண்டு அமைதி நிலையில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே வடக்கிருந்து வந்து நிலைபெற்ற சமன. புத்த சமயத்தவர்களாலும் அவர்களோடு முரண்பட்டு வந்த வைதிகக் குழுவினராலுமே பல்வேறு மதங்களும் மதப் போர்களும் இந்நாட்டிற் கிளைத்து வளர்ந்தன. இவ்வாறு இந்நாட்டில் முரண்பட்டு வளர்ந்துள்ள பல்வேறு மதங்களும் வடக்கிருந்து தமிழகத்திற் குடியேறின. அயலவர்களாலேயே பல்கின என்பதற்கு, அம்மதங்கள் பலவும் வடமொழிப் பெயர் கொண்டு உலவுதலும், அம்மதங்களைப் பற்றிய நூல்களெல்லாம் வடமொழியில் எழுதப்பெற்றிருத்தலுமே உறுபெறுஞ்சான்றாகும். இதனை நன்குனர்ந்த சுவாமி விவேகானந்தர் மதச்சண்டைகளும் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒருபெருங் கருவியாய் அமைந்தது வடமொழியே எனவும், அம்மொழி நூல்கள் தொலைந்துபோகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் எனவும் வருந்திக் கூறியுள்ளார்." பழைய தமிழ் நூல்களிற் சமயப் போருக்காவது சாதிச்சண்டைக்காவது இடமில்லை என்பதனைச் சங்க இலக்கியங்களால் நன்குணரலாம்.

சிவலிங்க வழிபாடு இன்னவுரு இன்னநிறம் என்று அறிய வொண்ணாத இறைவனைத் துணுருவில் நிறுத்தி வழிபடும் அருவுருவ வணக்கமாதலின், அவ்வணக்கம் பண்டைக்காலத்தில் சமய வேறுபாடில்லாத பொதுமை வாய்ந்த கடவுள் வழிபாடாகவே கருதப் பெற்றுவந்ததெனக் கருதவேண்டியுள்ளது.

40. மறைமலையடிகள், தமிழர் மதம், ப. 22.