பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


முதல்வனாகிய சிவபெருமானது திருவருள் வழியில் வந்தவர்கள் என்பது,

“மறைமுது முதல்வன் பின்னர் மேய

பொறையுயர் பொதியிற் பொருப்பன்"

எனவரும் தொடரால் உய்த்துணரப்படும். இத்தொடர்பு

“යූ * னவற் ெ துன்னரு * & ੋ

றொன்முது கடவுட் பின்னர்மேய வரைத்தாழருவிப்பொருப்பிற் பொருந” (மதுரைக்)

எனவரும் மதுரைக்காஞ்சியிற் கூறப்பட்டமை முன்னர்க் குறிக்கப்பட்டது.

"வடிவேலெறிந்த வான்பகை பொறாது

பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங்கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி. திங்கட்செல்வன் திருக்குலம் விளங்கச் செங்க ணாயிரத்தோன் திறல்வினங்காரம் பொங்கொனி மார்பிற் பூண்டோன் வாழி முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென் றிடியுடைப்பெருமழை எய்தாது ஏகப் பிழையா விளையுட்பெருவளஞ் சுரப்ப மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்க’

(சிலப். காடுகாண். 18-29)

என்று கூறி மாங்காட்டு மறையோன் பாண்டியனை வாழ்த்து கின்றான். இவ்வாழ்த்தின்கண், திங்கட் குலத்தினனாகிய பாண்டியன் முன்னொரு காலத்தில் வேலால் கடலை வென்றதும், ஆயிரங்கண்ணானாகிய இந்திரன் வஞ்சனை யால் அணிவித்த பெரிய ஆரத்தினைத் தாங்கிய பெருமையும், வளையினால் எறிந்து இந்திரனுடைய மணி முடியை வீழ்த்தியதும், பாண்டியனுக்குத் தோற்ற இந்திரன் தன் ஊர்தியாகிய மேகத்தைப் பாண்டிய நாட்டிற் பெய்யாதபடி