பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையிற் காணப்படும் தெய்வ வழிபாடுகளும் . . .

535


குரிய காஞ்சியிலும் நிகழ்ந்தன. ஆதலின் மணிமேகலை பிறந்து வளர்ந்து துறவடைந்த தமிழகத்தைச் சொல்லோவியஞ் செய்து காட்டும் முறையில் தமிழகத்தில் நிலவிய பல்வேறு தெய்வ வழிபாடுகளையும் தம் காலத்தில் வாழ்ந்த பல்வேறு சமய வாதிகளையும் தம் காப்பியத்திற் குறித்துச் செல்லுதல் இக்காப்பிய ஆசிரியராகிய சாத்தனாரது கடமையாயிற்று. அம்முறையில் இக் காப்பியத்தில் சிவன், முருகன், திருமால், குமரி, கொற்றவை, இந்திரன் முதலிய தொன்மைத் தெய்வ வழிபாடுகளும், மணிமேகலா தெய்வம், சதுக்கப்பூதம், சம்பாபதி, சிந்தா தேவி, தீவதிலகை, கந்திற்பாவை முதலிய பிற தெய்வங்களின் வழிபாடுகளும் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் நெடுங்காலமாக நிலவிவரும் சைவம் வைணவம் ஆகிய தொன்மைச் சமய நூல்களை விரித்துரைக்கும் சைவ வைணவ சமயவாதிகளுடன் வேத நெறியினைப் பின்பற்றியொழுகும் அளவைவாதி, பிரமவாதி ஆகியோர் கொள்கைகளும் தெய்வங் கொள்கையினை யுடன்படாத ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதியென்னும் ஐவகைச் சமயவாதி களின் தத்துவக் கொள்கைகளும் பிறர் மதங்களைப் பூர்வ பக்கமாக எடுத்துரைக்கும் முறையில் இக்காப்பியத்தில் மணிமேகலை சமயக்கனக்கர் தம் திறங்கேட்ட காதையில் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. பிறர் மதம் களைந்து தம் மதத்தினை (புத்த சமயத் தத்துவத்தினை) நிறுவும் நிலையில் அமைந்தது, மணிமேகலை தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதையாகும். இதன் கண் பெளத்த சமயத்தார் தம் கொள்கையினை நிறுவுதற்கு மேற்கொண்ட தருக்கநெறி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பெளத்த சமய வுண்மைகளைத் தெளிவாக விளக்கும் முறையில் அமைந்தது இக் காப்பியத்தின் இறுதிக் கண்ணதாகிய பவத்திறமறு கெனப்பாவை நோற்ற காதை'யாகும்.

மணிமேகலைக் காலத்துச் சமயவாதிகள்

மெய்ப்பொருள்களையுணர்த்துவனவாகிய நூல்கள்,