பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையிற் காணப்படும் தெய்வ வழிபாடுகளும் . . .

539


சிவபெருமான் என்பதும் அவ்விறைவனுக்கு மகனாகத் தோன்றியருளியவன் முருகப் பெருமான் என்பதும் முன்னர்க் கூறப்பட்டன. மணிமேகலையாசிரியர் சாத்தனாரும் இக் குறிப்பினைத் தம் காப்பியத்தில் எடுத்துரைத்துள்ளார். மணிமேகலையும் சுதமதியும் பூக்கொய்தற்பொருட்டு மலர்வனத்திற்குச் செல்லும்போது புகார் நகரவீதியிற் கண்ட நிகழ்ச்சிகளாகச் சிலவற்றை ஆசிரியர் புனைந்து கூறியுள்ளார். அவற்றுள் ஒன்று,

“தளர்நடை தாங்காக் கிளர்பூட்புதல்வரைப்

பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து இலங்குதொடி நல்லார் சிலர்நின்றேற்றி ஆலமர் செல்வன் மகன் விழாக் கால்கோள் காண்மினோவென்று கண்டுநிற்குநரும்”

(மணிமேகலை 3. 14:1-145)

என்பதாகும். மகளிர் சிலர் தளர்நடையினர்ாய்ப் பொறுக்க லாற்றாத அணிகலன்கள் அணியப்பெற்ற இளம் புதல்வர்களைப் பொன்னாலியன்ற தேர்மீதமைக்கப்பட்ட யானையின் மேல் அமரச்செய்து 'ஆலின் கீழமர்ந்த சிவபெருமானுக்கு மைந்தனாகிய முருகவேளின் விழாத் தொடங்கப் பெற்றதனைக் காண்பீராக’ என்று சொல்ல, அவ்வழகிய காட்சியை மற்றையோர் கண்டு மகிழ்ந்து நிற்குந் தோற்றத்தை இத்தொடர் புலப்படுத்துவதாகும். சிவபெருமான் ஆலநீழலில் அமர்ந்தருளி முனிவர் பெரு மக்களுக்கு அருமறைப் பொருள்களை உபதேசித்தருளிய தொன்மைச் செய்தியும் அம்முதல்வன் ஈன்ற மைந்தனாகிய முருகப் பெருமானுக்கு ஊர்தோறும் திருவிழா நிகழ்த்தும் வழக்கமும், அத்திருவிழா நாட்களில் முருகப்பெருமான் தேரிலும் யானையிலும் எழுந்தருளித் திருவுலாப்போதும் தெய்வக் காட்சியும் மேற்காட்டிய தொடரால் நன்கு புலனாதல் காணலாம்.

முருகப்பெருமானுக்குச் சிறப்பாகவுரியது கார் காலத்து மலரும் கடப்பமலர் மாலையாகும். இது காரலர் கடம்பன் (மணிமேகலை 4, 49) எனவரும் தொட்ராற் குறிக்கப்பட்டது.