பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


'குமரிபாதங்கொள்கையின் வணங்கி (மணி. 13.74)

எனவரும் தொடராற்புலனாம்.

கொற்றவை

விந்தமலையில் வெற்றிவெல்போர்க் கொற்றவை யாகிய துர்க்கைக்குக் கோயில் உண்டு என்பதும் அம்மலை யைக் காக்கும் காவற்றெய்வமாகிய விந்தாகடிகை என்பவள் யாரேனும் அம்மலை மேலுள்ள கோயிலின்மேல் வான்வழியே சென்றால் வெகுண்டு அவர்களை இழுத்துத் தன் வயிற்றின் அகத்திடுவாள் என்பதும்

"அந்தரஞ் செல்வோர் அந்தரியிருந்த

விந்தமால்வரை மீமிசைப்போகார் போவாருளரெனிற் பொங்கியசினத்தள் சாயையின் வாங்கித்தன் வயிற்றிஉேம் விந்தங் காக்கும் விந்தா கடிகை” (மணி.20.115-120)

எனவரும் மணிமேகலைப் பகுதியால் அறியப்படும். சக்கரவாளக் கோட்டத்தில் காடமர் செல்வியாகிய கொற்றவைக்குக் கோயிலமைந்திருந்ததென்பது,

'காடமர் செல்விகழி பெருங்கோட்டமும்’

என்ற தொடராற் புலனாகும்.

சிந்தாதேவி

பாண்டிய நாட்டு மதுரையம் பதியில் சிந்தா தேவியாகிய கலைமகளுக்குக் கோயில் இருந்ததென்பதும், அங்கு எழுந்தருளிய சிந்தாதேவி என்றும் நாடுவறங்கூரினும் வறுமையடையாது உணவளிக்கும் பிச்சைப் பாத்திரத்தைத் தந்தருளியதென்பதும் மணிமேகலை ஆபுத்திரன்திறம் அறிவித்த காதையாலும் பாத்திரமரபு கூறிய காதையாலும் புலனாம். “சிந்தாதேவி செழுங்கலை நியமித்து, நந்தா விளக்கே நாமிசைப்பாவாய், வானோர் தலைவி மண்னோர் முதல்வி’ என அத்தெய்வத்தை ஆபுத்திரன் போற்றுதலால்