பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அருளிச்செய்துள்ளமை இங்கு ஒப்புநோக்கற்பாலதாகும். இங்கனம் இறைவன் அட்டமூர்த்தியாகத் திகழ்கின்றான். எனவே கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருட் கொள்கை அக்காலச் சைவவாதிக்கு உடன்பாடாதல் நன்கு தெளியப்படும். உலகாகிய சடப்பொருளோடும் உயிராகிய சித்துப்பொருள்களோடும் இரண்டறக் கலந்து நிற்குந் திறத்தில் இறைவனுக்குள்ள அத்துவித சம்பந்தத்தை உவமங்காட்டி விளக்கும் முறையில் அமைந்தது, உயிரும் யாக்கையுமாய்க் கட்டி நிற்போன்’ என்ற தொடராகும். உலகுயிர்களோடு இறைவன் பிரிவின்றி ஒன்றாய்க் கலந்து நிற்குத் திறத்திற்கு, உயிரானது உடம்போடு பிரிவின்றி ஒன்றாய்க் கலந்து நிற்கும் திறம் உவமையாகக் கூறப்பட்டது. ‘உயிரும் யாக்கையும் ஆய்' என்புழி ஆக்கச்சொல் "ஆள்வாரிலி மாடு ஆவேனோ (திருவாசகம்) என்புழிப் போல உவமவுருபின் பொருள் குறித்து நின்றது. உயிரானது உடம்பெனவும் தான் எனவும் பிரித்தறியவொண்ணாதவாறு உடம்பேயாய்க் கலந்துநின்ற அவ்வுடம்பினை இயக்கி நிற்றல் போல இறைவனும் உலகமே தனது உருவமாகக் கலந்து ஒன்றாய் நின்று உலகுயிர்களை இயக்கியருள்கின்றான் என்பது சைவசமயத்தின் துணிபாகும். 'உயிரும் யாக்கையு மாய்க் கட்டி நிற்போன்’ எனவே, உயிரும் உடம்பும் கலப்பினால் ஒன்றாயினும் உணர்வுடைமையும் உணர் வின்மையும் ஆகிய பொருட்டன்மையால் தம்முள் வேறாதல் போன்று, இறைவனும் உலகுயிர்களோடு கலப்பினால் ஒன்றாயினும் பொருட்டன்மையால் வேறென்பதும் உய்த்துணரப்படும். இங்ங்ணம் இறைவனாகிய சிவபெருமான் உலகமேயுருவமாக எவ்வகைப் பொருள்களும் விரித்துப் பரவியதன் அருள் எல்லைக்குள் அடங்கி யமைத்தான் அவற்றின் மேற்பட விரிந்து விளங்கும் இயல்பினனாதலை,

"நிலவுக்கதிரணைந்த நீள்பெருஞ் சென்னி

உலகுபொதியுருவத் துயர்ந்தோன்” (சிலப். கால்கோட்)

எனவரும் தொடரில் இளங்கோவடிகள் தெளிவாகக்

குறித்துள்ளார்.

உயிர்களின் அகத்திருளை நீக்கி அறிவினை விளக்கும்