பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையிற் காணப்படும் தெய்வ வழிபாடுகளும் . . .

551


திகழுந்திறம் இங்குப் புலப்படுத்தப் பெற்றுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும்.

மணிமேகலை கூறும் சைவக்கொள்கை திருமுறைகளில் அமைந்துள்ளமை

இறைவன் எண்பேருருவினனாய்ப் பொருள்தோறும் யாண்டும் நீக்கமறக்கலந்து உடனாய் நிற்கும் அத்துவித இயல்பினை விளக்குவது,

"நிலநீர் நெருப்புயிர் நீள்விகம்புநிலாப்பகலோன்

புலனாயமைந்தனோடெண் வகையாய்ப்

புணர்ந்துநின்றான் உலகேழெனத்திசை பத்தெனத் தானொருவனுமே பலவாகிநின்றவாதோனோக்கமாடாமோ”

எனவரும் திருவாசகச் செழும்பாடலாகும். ஒருபொருளே பலபொருள்களாக விரிந்து தோற்றுதலும், ஒருபொருளே பல பொருள்களிலும் ஊடுருவிக் கலந்து நிற்றலும் தம்முள் மாறாகிய இருவேறு தன்மைகளாகும். இவ்விரண்டினுள் முழுமுதற் பொருள் ஒன்றே தானல்லாத பலபொருள்களிலும் ஊடுருவி இரண்டறக் கலந்து நிற்கும் இயல்பினை அறிவுறுத்துவது, தான் ஒருவனுமே பலவாகி நின்றவா’ என்ற தொடராகும். இத்திருப்பாடலில் எண்வகையாய் நின்றான் என்னாது எண் வகையாப் புனர்ந்து நின்றான்’ எனத் திருவாதவூரடிகள் தாம் கூறும் பொருள் இனிது விளங்க விரித்துக்கூறிய நுட்பம் இங்கு நினைக்கத் தக்கது. ‘புணர்ந்து நிற்றல்’ என்றது, ஒருபொருள் தானல்லாத பிறபொருளுடன் கூடிநிற்றலையே குறிப்பதாகும். இங்ங்னமன்றி ஒருபொருளே பலவாக விரிந்து தோன்றுதலையோ, ஒன்று மற்றொன்றாகத் திரிந்து தோன்றுதலையோ அத்தொடர் குறிப்பதன்று. ஓர் உடம்பினுட் கலந்து நிற்கும் உயிர், அவ்வுடம்பின் ஐம்பொறிகளிலும் ஐம்புலவுணர்வுகளைத் தோற்றுவித்தல் பற்றி உடம்போடு ஒன்றாய்க் கூடி நிற்பினும் அதன் தன்மையினைக் கூர்ந்து நோக்குங்கால் அவ்வுயிர் உடம்பின் வேறாதல் போன்று, இறைவனும் எண்பேருருவினனாக