பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையிற் காணப்படும் தெய்வ வழிபாடுகளும் . . .

553


அலரி மாலையினையணிந்த தோளினனாய் குவிந்த முகிழாகிய எருக்க மலர்களைக் கோத்த மாலையை யணிந்தவனாய், உயர்ந்த கிளைகளிலுள்ள பூங்கொத்துக் களையும் சுள்ளிகளையும் ஒடித்துக் கிழிந்த உடையிற் கட்டிக்கொண்டு உடல் முழுவதும் வெண்ணிறனிந்து அழுதும் தொழுதும் சுழன்றும் ஒடியும் ஒருபக்கத்தில் நின்று தன்னிழலைக் கண்டு மாறுபட்டுத் தாமதித்தும் நின்ற காட்சியை,

“கணவிரமாலையிற் கட்டியதிரள் புயன்

குவிமுகிழெருக்கிற் கோத்தமாலையன் சிதவற்றுனியொடு சேணோங்கு பெருஞ்சினைத் ததன் வீழ்பொடித்துக் கட்டியவுடையினன் வெண்பலிச் சாந்தம் மெய்ம்முழுதுரீஇ மையலுற்றமகன்” (மணி.3.104-114)

எனவரும் தொடரிற் சாத்தனார் புனைந்துரைக்கின்றார். இதன்கன் மையலுற்ற மகனாகிய பித்தன் கொண்டுள்ள வேடம் முழுநீறுபூசிய சிவனடியார் திருவேடத்தை நினைவுபடுத்தும் நிலையில் அமைந்துள்ளமை உய்த்துணரத் தகுவதாகும்.

இவ்வாறே சக்கர வாளக்கோட்டம் உரைத்த காதையில்,

“சுடலை நோன்பிகள் ஒடியாவுள்ளமொடு

மடைதீயுறுக்கும் வன்னிமன்றமும்” {8. 88-87)

எனக் காபாலிக சமயத்தாரையும்,

‘விரதபாக்கையர் உடைதலை தொகுத்தார்.

கிருந்தொடர்ப்படுக்கும் இரத்திமன்றமும்” (5.88-89) என மாவிரத சமயத்தாரையும் சாத்தனார் குறித்துள்ளமை இங்கு நினைக்கத்தக்கதாகும்.

அரியதவச் செல்வர்களும் நாடாளும் அரசர்களும், கணவனோடு ஒருங்குயிர் விடும் கற்புடைமகளிரும் இறந்துபட்டால் அவர்கட்குக் கோயிலெடுத்து வழிபடும்