பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

555


தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் கூறும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் தத்துவவுண்மைகளும்

பன்னிரு திருமுறையாசிரியர்களுள் காலத்தால் முற்பட்டவர் திருமூலதேவநாயனார் ஆவர். இவரை 'நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” எனத் திருத்தொண்டத் தொகையில் நம்பியாரூரர் பரவிப் போற்றியுள்ளார். திருத்தொண்டத் தொகையின் வகையாகத் திருத்தொண்டர் திருவந்தாதி பாடியருளிய நம்பியாண்டார் நம்பிகள்,

"குடிமன்னு சாத்தனுர் கோக்குல மேய்ப்போன்

- குரம்பைபுக்கு முடிமன்னு கூனற்பிறையாளன்றன்னை முழுத்தமிழின் படிமன்னு வேதத்தின் சொற்படியே பரவிட்டெனுச்சி அடிமன்ன வைத்தபிரான மூலனாகிய அங்கணனே”(36)

என வரும் பாடலில் திருமூலர் வரலாற்றை வகுத்துக் கூறியுள்ளார். "நற்குடிகள் நிலைபெற்ற சாத்தனூரிலே பசுநிரையை மேய்ப்போன் ஆகிய ஆயனது உடம்பிற் புகுந்து, முடியிலே நிலைபெற்ற வளைந்த பிறைச் சந்திரனைச் சூடியவனாகிய சிவபெருமானை முழுமை வாய்ந்த தமிழ்கூறிய வண்ணமே நிலைபெற்ற வேதங்கள் சொல்லியபடியே பரவிப் போற்றி எனது சென்னியிலே தன் திருவடிகளை நிலைபெறச் செய்த பெருமான் மூலன் என்னும் பெயருடைய அருளாள னாவன்” என்பது இத்திருவந்தாதியின் பொருளாகும்.

இப்பாடலில், பரவிட்டு’ என்னும் வினையை, முழுத்தமிழின்படியே பரவிட்டு எனவும், வேதத்தின் சொற் படியே பரவிட்டு எனவும் ஈரிடத்தும் சென்றியையும்படி