பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நம்பியாண்டார் நம்பி கூறியிருத்தலால், திருமூலநாயனார் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளும்

நிரம்பிய தமிழ் மறைகளையும் வடமொழி வேதங்களையும்

தழுவித் தமிழாகமம் ஆகிய இத்திருமந்திரமாலையை

அருளிச் செய்துள்ளார் என்பது இனிது புலனாகும்.

அம்மையப்பராகிய இறைவன் தமிழும் ஆரியமும் ஆகிய

இருமொழிகளிலும் பொருள் ஒத்து அமையும்படி

ஞானநூற்பொருள்களை உமையம்யைார்க்குத் திருவாய்

மலர்ந்தருளினன் என்பதனை,

8 ;

மாரியும் கோடையும் வார்பணிதுங்கநின் றேரிய நின்றங் கிளைக்கின்ற காலத்து

ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்குக் கருணை செய்தானே.”

(திருமந்திரம் 65)

எனத் திருமூலர் தெளிவாகக் குறித்துள்ளார். இப்பாடற் பொருளைக் கூர்ந்து நோக்குங்கால் முற்காலத்தில் சிவபெருமானால் அருளிச் செய்யப்பெற்ற ஞானநூல்களாகிய சிவாகமங்கள் தமிழிலும் வடமொழியிலும் ஒப்ப அமைந் திருந்தன என்பது நன்கு புலனாம். உலக மக்கள் உண்ர்ந்து உய்ய்ம்படிப் பண்டைநாளில் தமிழிலும் வடமொழியிலும் இறைவனூலாகிய ஆகமங்கள் இயற்றப்பெற்று வழங்கின என்பதனை,

'அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டுமாறும்

சிமிட்டலைப்பட்டுயிர்போகின்ற வ்ாறும் தமிழ்ச்சொல் வடசொல்லெனுமிவ்விரண்டும் உணர்த்துமவனையுணரலுமாகும்" (திருமந்திரம் 66)

என ஆகமச் சிறப்புணர்த்தும் பகுதியில் திருமூலர் விள்ங்கக் கூறியுள்ளார். வழிபாட்டுக்குரிய மந்திரங்கள் தமிழிலும் பிறமொழிகளிலும் அமைந்திருந்தன. இச்செய்தி வயிரவி மந்திரம் என்ற பகுதியில்

"அந்தநடுவிரல் ஆதிசிறுவிரல்

வந்த வழிமுறை மாறியுரை செய்யும்