பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

557


செந்தமிழாதி தெளிந்து வழிபடு நந்தியிதனை நலமுரைத்தானே” (திருமந்திரம்1039)

எனத் திருமூலர் அறிவுறுத்துதலால் அறியப்படும்.

திருமூலநாயனார் தமது வரலாறு கூறுவதாக அமைந்த திருமந்திரப் பாயிரப் பகுதியில்,

'நந்தியிணையடி நான்தலைமேற்கொண்டு புந்தியினுள்ளே புகப்பெய்து போற்றிசெய்து அந்திமதிபுனை அரனடி நாடொறுஞ் சிந்தை செய்தாகமஞ் செப்பலுற்றேனே" (திருமந்திரம் 73)

எனவும்,

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” (திருமந்திரம் 81)

எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகள் திருமந்திர மாலையாகிய இந்நூல் தமிழாகமமாக அருளிச் செய்யப்பெற்ற திறத்தைப் புலப்படுத்துவனவாகும்.

திருமந்திரத்திற் கூறப்படும் சைவசித்தாந்தத் தத்துவ வுண்மைகள் செந்தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்த சிவஞானிகளால் அருளிச் செய்யப்பெற்ற தொன்மை யுடையனவாகும். இவ்வுண்மையினை,

“சதாசிவதத்துவம் முத்தமிழ்வேதம்

இதாசனியா திருந்தேனின்ற காலம்” (திருமந்திரம்78)

எனவும்,

"தமிழ்மண்டலம் ஐந்துந் தழுவிய ஞானம்

உமிழ்வது போல உலகத் திரிவர் அவிழும் மனமும் எம்.ஆதி யறிவுந் தமிழ்மண்டலம் ஐந்துந்தத்துவமாமே”

(திருமந்திரம் 1648)

எனவரும் திருமூலர் வாய்மொழிகள் நன்கு வலியுறுத்தல்

3:/τοδότουπιο.