பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வடமொழியிலுள்ள வேதத்தைப் பொதுநூலாகவும் தமிழிலும் வடமொழியிலும் உள்ள சிவாகமங்களைச் சிறப்பு நூலாகவும் கொண்டு பொதுவும் சிறப்புமாகிய இவ்விரு திறப்பொருள்களும் ஒருங்கமைய அருளிச்செய்யப் பெற்ற செந்தமிழ்ச் சிவாகமம் திருமந்திரமாலைய்ாகும். இவ்வுண்மை,

"வேதமோடாகமம் மெய்யாம் இறைவனுால்

ஒதும் பொதுவுஞ் சிறப்புமென்றுள்ளன. நாதன் உரையவை நாடில் இரண்டந்தம் பேதம தென்பர் பெரியோர்க்கபேதமே (51)

எனவரும் திருமூலர் வாய்மொழியாலும், "முழுத்தமிழின் படி, வேதத்தின் சொற்படியே பரவிட்டு என் உச்சி, அடிமன்ன வைத்தபிரான் மூலனாகிய அங்கணனே” என நம்பியாண்டார் நம்பிகள் திருமூலநாயனாரைக் குறித்துப் போற்றிய தொடராலும் நன்கு துணியப்படும்.

திருக்கயிலாயத்தில் நந்திதேவர்.பால் ஞானோபதேசம் பெற்ற நான்மறை யோகிகளுள் ஒருவர், பொதியமலையில் அகத்திய முனிவரைக் கண்டு அளவளாவும் விருப்புடன் கயிலையினின்றும் புறப்பட்டுத் திருக்கேதாரம், பசுபதி நேபாளம், அவிமுத்தம், விந்தம், திருப்பருப்பதம் முதலிய தலங்களைப் பணிந்து தமிழ்நாட்டையடைந்து திருக் காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, திருவதிகை ஆகிய தலங்களை வணங்கித் தில்லைப் பதியையடைந்து இறைவனது திருக்கூத்துத் தரிசனம் கண்டு மகிழ்ந்தார். பின்பு அங்கிருந்தும் புறப்பட்டுக் காவிரியையடைந்து நீராடித் திருவாவடுதுறை யிறைவரை வணங்கிச் செல்லும் வழியில் சாத்தனுரையடுத்துக் காவிரியின் தென்கரையில் உள்ள சோலையில் ஆநிரை மேய்க்கும் மூலன் என்னும் பெயருடைய ஆயன் இறந்துபட, அந்நிலையில் அவனால் மேய்க்கப்பெற்ற பசுக்கள் அவனுடம்பைச் சூழ்ந்து நின்று கதறின. அப்பசுக்களின் துயரத்தைப் போக்கத் திருவுளங் கொண்ட சித்தராகிய யோகியார் தமது உடம்பை அக் சோலையின் ஒருபுறத்தே பாதுகாப்பாக மறைத்து வைத்து விட்டுத் தாம் கற்றுவல்ல பரகாயப் பிரவேசம் (கடுவிட்டுக் கூடுபாய்தல்) என்னும் சித்தித் திறத்தால் தமது உயிரை மூலன்