பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மேற்குறித்த தெய்வ வழிபாடுகள் என்பதும், இங்குக் குறிக்கப்பெற்ற தெய்வங்களுள் உயர்வு தாழ்வு கற்பித்தல் பண்டைத் தமிழ் நூலோர் கருத்தன்று என்பதும் மேல் எடுத்துக் காட்டிய தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்கு புலனாம். மேற்குறித்த தெய்வப் பெயர்களுள் மாயோன், சேயோன் என நிறப்பண்பு பற்றிய பெயர்களும் வழங்கப் பெறுதலாலும் நிறப்பண்பு வடிவினை நிலைக்களமாகக் கொண்டல்லது புலப்படாதாதலானும் இத்தெய்வங்களுக்குத் திருவுருவமைத்து வழிபடும் வழக்கம் தொல்காப்பியனார் காலத்துக்கு முற்பட்ட தொன்மையுடையதென்பது நன்கு துணியப்படும்.

காடுறையுலகமாகிய முல்லை நிலத்துக்கோவலர், தம்மால் மேய்க்கப் பெறும் ஆனிரைகள் நோயின்றி வளர்ந்து பாற்பயன் தருதல் வேண்டிக் காயாம் பூவண்ணனாகிய மாயோனைப் பரவிக் குரவைக் கூத்தாடுதலும், மைவரை யுலகமாகிய குறிஞ்சி நிலத்துக் குறவர்கள் மலரின் உள்ளிருந்தெழும் நறுமணம் போன்று உயிர்க்குயிராய் விளங்குந் தெய்வமனமாகிய வெறியினையறியுஞ் சிறப்புடைய வேலனையழைத்து வெறியாடல் நிகழ்த்திச் செங்காந்தள் நிற வண்ணனாகிய செவ்வேளை வழிபடுதலும், மருதநிலத்து வாழும் உழவர்கள் முறை செய்து காப்பாற்றும் இறைவனென மலர்தலையுலகிற்கு உயிரெனச் சிறந்த வேந்தனை வழிபடுதலும்,நெய்தல் நிலத்துப் பரதவர் தமது வலைவளஞ் சிறத்தல் வேண்டிக் கடற்றொய்வமாகிய வருணனை வழிபடுதலும் பண்டைநாளில் தமிழகத்து நானில மக்கள் மேற்கொண்டொழுகிய தெய்வ வழிபாடுகளாகும். இவ்வழிபாடுகளோடு அச்சமகற்றி வென்றி நல்கும் கொற்றவையாகிய பழையோள் வழிபாடும் தறுகண்மை மிக்க தமிழ் மறவர்களால் மேற்கொள்ளப்பெற்றது. குறிஞ்சிநிலத் தெய்வமாகக் கொண்டு போற்றப் பெறும் முருகவேள் வழிபாட்டின் சிறப்பினை அம் முதல்வனை வழிபடும் வேலன்மேல் ஏற்றி வெறியறிசிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள் என்ற தொடராலும், காயாமலர்வண்ணனாகிய மாயோனது காத்தற் சிறப்பினை "மாயோன் மேய மன்பெருஞ்சிறப்பின், தாவாவிழுப்புகழ்ப்