பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

561


'நந்தி அருளா அது என ஆசிரியர் சுட்டியது. இறைவனால் மறைத்தொழிக்கப்பட்ட தமது பழையவுடம்பினை. இவ்வாறு இறைவன் தம்முடைய பழையவுடம்பினை மறைத்து மூலனுடம்பிற் புகச் செய்தருளிய இப்படைப்பு, அம்முதல் வனது பொருள் சேர் புகழ்த்திறங்களைச் செந்தமிழ்ப் பாக்களால் புனைந்து போற்றுதற்கேற்ற நல்லதொரு படைப்பாகும் என்பார்,

“பின்னை நின்றென்னே பிறவி பெறுவது

முன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர் என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” (திருமந், 81)

என்றருளிச் செய்தார்.

சிவபெருமான் திருவருளால் மூலனுடம்பிற் புகுந்து திருமூலர் எனப் பெயர் பெற்ற சிவயோகியார் திருவாவடு துறைத் திருக்கோயிலையடைந்து அம்மையப்பராகிய இறைவரைப் பணிந்து அங்குள்ள சிவபோதியாகிய அரசமரத்தின் நீழலில் எண்ணில்லாத பல்லாண்டுகள் சிவயோகத்தில் அமர்ந்திருந்தார் என்பது,

“சேர்ந்திருந்தேன் சிவமங்கைதன் பங்கனைச்

சேர்ந்திருந்தேன் சிவனாவடு தண்டுறை

சேர்ந்திருந்தேன் சிவபோதியினிழலிற்

சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே (திருமந்: 79)

எனவும்,

“இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி

இருந்தேன் இராப்பகல் அற்றவிடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என்னந்தி இணையடிக் கீழே'(திருமந். 80)

எனவும்,

"ஞானத் தலைவிதன் நந்திநகர் புக்கு ஊனமில் ஒன்பது கோடியுகந்தனுள்

சை, சி. சா. வ. 36