பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

563


தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச்சாத்திரம் பொங்கிமிகாமை வைத்தான் பொருள்தானுமே”

(திருமந், 87)

என வரும் திருப்பாடலில் திருமூலர் தெளிவாக வெளியிட்டுள்ளமை காணலாம்.

திருமூலர் தம்முடன் நந்தியெம் பெருமான் பால் உபதேசம் பெற்றவர்களாக நந்திகள் நால்வரையும் (சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் நால்வரையும்) சிவயோகமாமுனி, தில்லையில் திருக்கூத்துத் தெரிசனம் கண்ட பதஞ்சலி, வியாக்கிர பாதமுனிவர் ஆகியோரையும் சேர்த்து எண்மராகக் குறித்துள்ளதனை (திருமந்திரம்-67) நோக்குங்கால் இவர் மேற்குறித்த முனிவர் பெருமக்கள் காலத்தையொட்டி வாழ்ந்தவர் என்பது நன்கு புலனாகும். தில்லையிற் பதஞ்சலி வியாக்கிரபாதர் ஆகிய முனிவர் களுடன் இறைவனது திருக்கூத்தினைக் கண்டபின்னர் இவர் இவ்வுலகில் நெடுங்காலம் இருந்தவர் என்பது,

"செப்புஞ் சிவாகமம் என்னும் அப்பேர்பெற்றும்

அப்படி நல்கும் அருள்நந்திதாள் பெற்றுத் தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் ஒப்பில் எழுகோடியுகமிருந்தேனே' (திருமந். 74)

என இவர் தமது வரலாறு கூறுதலால் இனிது விளங்கும்.

திருமூலர் இவ்வாறு இவ்வுலகில் நெடுங்காலம் தங்கியிருந்ததன் காரணம் இறைவனுடன் பிரிப்பின்றி விளங்கும் அருட்சத்தியாகிய புவனாபதியென்னும் அருந்தவச் செல்வியை வழிபட்டு அவ்வன்னையின் திருவருளால் இவ்வுலகிற் பத்திநெறியையும் யோக நெறியையும் ஞானநெறி யையும் நிலைபெறச்செய்து இறைவனது அருட்கூத்தினை விளக்கும் தமிழ்மறையாகிய திருமந்திரப் பனுவலை அருளிச் செய்தற்பொருட்டேயாம்.

“இருந்தவக் காரணம் கேள்இந்திரனே பொருந்திய செல்வப் புவனாபதியாம்