பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அருந்தவச் செல்வியைச் சேவித்துஅடியேன் பரிந்துடன் வந்தனன் பத்தியினாலே” (திருமந். 75)

எனவும்,

“மாலாங்கனே யிங்குயான் வந்தகாரணம் நீலாங்கமேனியன் நேரிழையாளொடு மூலாங்கமாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே' (திருமந்,77)

எனவும் திருமூலர் தன் மாணாக்கர்களாகிய இந்திரன், மாலாங்கன் என்பவர்களை நோக்கிக் கூறும் முறையில் அமைந்த திருப்பாடல்களால் இக்காரணத்தினை நன்கு புலப்படுத்தியுள்ளார்.

திருமூலர் அருளிய திருமந்திரப் பனுவலைக் கேட்டுணர்ந்த மாணவர்கள் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமலையன் என்னும் பெயருடைய எழுவராவர். இச்செய்தி,

"மந்திரம் பெற்றவழிமுறை மாலாங்கன் இந்திரன் சோமன்பிரமன் உருத்திரன் கந்துருக் காலாங்கி கஞ்சமலையனோடு இந்த எழுவரும் என்வழியாமே” (திருமந். 69)

எனவரும் பாடலால் அறியப்படும். மூலனுடம்பிற் புக்குத் திருமூலராயெழுந்த சிவயோகியார், சிவபெருமான் திருவருளால் சதாசிவமூர்த்தியையொத்துச் சிவாகமப் பொருளை அறிவுறுத்தவல்ல முற்றுணர்வும் தேவர்க் கெல்லாம் முதன்மையும் பெற்று விளங்கிய திறத்தினை,

"நந்தியருளாலே மூலனைநாடிப்பின்

நந்தியருளாலே சதாசிவனாயினேன் நந்தியருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன் நந்தியருளாலே நானிருந்தேனே' (திருமந். 92)

எனவரும் திருப்பாடலிற் குறித்துள்ளார்.

கி. பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாரூரர்