பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

565


நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் எனப் போற்றியிருத்தலாலும் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தருடன் திருநாவுக்கரசரும் அருளிய தேவாரப் பதிகங்களில் திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள்களும் பலவிடங்களில் எடுத்தாளப்பெறுதலாலும் திருமூலநாயனாரது காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது நன்கு தெளியப்படும். திருமூலர் திருவாவடுதுறையில் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில் அமர்ந்திருந்து ஆண்டுக்கு ஒருபாடலாக மூவாயிரந் திருப்பாடல்களை அருளிச் செய்தார் எனத் திருத்தொண்டர் புராணம் கூறும். இக் கூற்றுக்குத் தெளிவான சான்றுகள் கிடைக்காமற்போயினும் சேக்கிழாரடிகள் கூறுமாறு திருமூலர் நெடுங்காலம் சிவயோகத்தமர்ந்திருந்து திருமந்திரப் பனுவலைப் பாடியருளினார் என்பது,

'ஒப்பில் எழுகோடியுகம் இருந்தேனே' (திருமந். 74)

எனவும்,

'இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி (திருமந் 80)

எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு துணியப்படும். இக்காயத்தே எனத் திருமூலர் சுட்டியது சிவயோகியாராகிய அவர் தமதுடம்பைத் துறந்து மூலன் என்னும் இடையனது உடம்பிற் புகுந்து நிலைபெற்ற பின்னராதலின் அவரால் இக்காயம் எனச் சுட்டப்பட்ட உடம்பு மூலனுடம்பு எனக் கொள்ளுதல் பொருந்தும். மேற்குறித்த பாடல்களில் எழு கோடியுகம்’, ‘என்னிலி கோடி என்ற தொடர்கள் அளவுபடாத பல்லாண்டுகள் எனப் பொருள் தந்து நின்றன.

திருக்குறளிலுள்ள சொற்றொடர்களும் பொருள் களும் திருமந்திரத்தில் எடுத்தாளப் பெறுதலாலும், தொல் காலத்தில் மூன்று பகுதிகளாக இருந்த தமிழகம் திருமந்திரத்தில் ஐந்து மண்டலங்களாகப் பகுத்துணரப்படுத லாலும் கடைச்சங்க காலத்திற்குப் பின் கொங்குமண்டலம் அயலவர்க்கு இடந்தந்து கள்வர்பயத்தால் வழிப்போவார்க்கு