பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பெரியோர், இஃது இவ்வாறாகுக எனத் தமது ஆணையாற் சொல்லப்பட்டு, அவ்வாற்றல் அனைத்தையும் தன் கட் பொதிந்து வைத்துள்ள செறிவுடைய நன்மொழிகளே மந்திரம் எனப்படும். இதன் இயல்பினை ஆசிரியர் தொல்காப்பியனார்,

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப” (செய்யுளியல்)

என்ற நூற்பாவில் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார். இந்நூற்பாவை அடியொற்றியதே,

“நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்” (திருக்குறள் 28)

எனவரும் திருக்குறளாகும். “நிறைமொழி என்பது அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்பயன்களைப் பயந்தே விடும் மொழி” என்றார் பரிமேலழகர். நிறைமொழி மாந்தராவார், இருவகைப் பற்றுக்களையும் நீக்கி ஐந்து புலன்களையும் அடக்கி எவ்வுயிர்க்கும் அருளுடையராய் வாழும் பெரியோர். ஆணையிற்கிளத்தலாவது, இஃது இவ்வாறு ஆகுக' எனத் தமது ஆற்றல் தோன்றச் சொல்லுதல். மறைமொழி புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லும் சொற்றொடர் என்பர் பெரியோர். இனி, மறைமொழி என்பதற்குப் பலர்க்கும் புலப்படாது மறைந்துள்ள அரிய உண்மைகளைத் தன்னகத்தே பொதிந்துள்ள மொழி எனப் பொருளுரைத்தலும் பொருந்தும். சான்றோர் எண்ணியவண்ணம் செயற்படுத்தற் குரிய ஆற்றல் முழுவதும் தன் கண் வாய்க்கப் பெற்ற மொழியே மந்திரம் எனப்படும் என்பார், அதனை 'வாய்மொழி (செய்யுளியல் 75) என்ற பெயராலும் குறித்தார் தொல்கரிப்பியனார்.

இவை தமிழ்மந்திரம் என்றற்கும். மந்திரந்தானே தட்டாகி அங்கதம் எனப்படுவனவும் உள. அங்கதப்பாட்டு அல்லாத மறைமொழியே மந்திரம் என ஈண்டுக் சிறப்பித்துரைக்கப்படும் என்றற்கும் ‘மறைமொழிதானே' எனப் பிரித்துரைத்தார். எனவே சபித்தற்பொருளில் வரும்