பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

49


பூவை நிலை என்ற தொடராலும், கொற்றவை வழிபாட்டின் பயனாகப் போர்மறவர்க்குளவாகும் தறுகண் உணர்வினைச் ‘சிறந்த கொற்றவை நிலை’ என்ற தொடராலும் தொல்காப்பியப் புறத்தினையியலில் ஆசிரியர் தொல் காப்பியினார் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார்.

தெய்வம் அவ்வந்நிலத்துக் கருப்பொருள்களுள் ஒன்றாகக் கூ!ப்படினும் எல்லாப்பொருள்களினும் சிறந்ததாக மக்களால் முதற்கண் போற்றத்தக்கது என்னும் மெய்ம்மையினைப் பண்டைத் தமிழ்ச் சான்றோர் மறவாது பேணி வந்துள்ளார்கள். அதுபற்றியே ஆசிரியர் தொல்காப்பியனார் முதல் பொருள் வகையாகிய நானிலத்தினையெண்ணும் பொழுது மாயோன் மேய காடுறையுலகம் சேயோன் மேயமைவரையுலகம் என்றாங்கு அவ்வந் நிலத்திற்குரிய தெய்வத்தை முன்னிறுத்தியும், கருப்பொருள்களை என்னுமிடத்துத் தெய்வம் உனாவே என்றாங்குத் தெய்வத்தை முதற்கண் வைத்தும் மக்களால் வழிபடுதற்குரிய தெய்வத்தின் சிறப்பினை நன்கு வலியுறுத்தியுள்ளார்.

கருப்பொருள்பற்றிய நிகழ்ச்சியினைத் தலைவன் தலைவி முதலிய அகத்தினை மாந்தரது ஒழுகலாற்றிற்கு உவமையாகக் கொண்டு உய்த்துணரும்படிச் செய்யுள் செய்யும் புலவராற் கருதியமைக்கப் பெறுவது உள்ளுறையுவமம் எனப்படும். 'யான் புலப்படக் கூறுகின்ற கருப்பொருள் நிகழ்ச்சியுடன் புலப்படக் கூறாத பொருளும் ஒத்துப் புலப்படுவதாக எனக் கருதிய புலவன் தன்னுள்ளக் கருத்துப் படிப்போர்க்கு இனிது புலனாகும் வண்ணம் உணர்த்துதற்கு உறுப்பாகிய சொற்கள் அமையத் தான் பாடிய செய்யுளில் உய்த்துணர வைத்தல் உள்ளுறையுவமம் எனப்படும். கருப்பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு இவ்வுவமை பிறக்குங்கால் அக்கருப்பொருள்பாலமைந்த நன்றுந் தீ துமாகிய செயல்களை உள்ளுறையாற் புலப்படுத்தக் கருதிய அகத்தினை மாந்தர் செயல்களுக்கு ஒப்புமையினைக் கருதியுணரும் நிலையுண்டாகும். கருப்பொருள்களில் ஒன்றாகிய தெய்வத்தின் செயல்களை உவமையாக எடுத்துரைப்பின் மக்களால் நன்கு மதித்துப் போற்றப்பெறும் தெய்வத்தின்

சை. சி. ஈ. வ. 4