பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


செப்பலுற்றேன்’ (73) எனவும், பெருஞ்சுடர் ஒன்றின் வேரறியாமை விளம்பு கின்றேன்’ (96) எனவும் திருமூலர் இந்நூற்பொருளைத் தாம் சிந்தித்துணர்ந்த அனுபவ மொழிகளில் வைத்து அருளிச் செய்திருத்தலாலும், திருவாவடுதுறையில் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்து அமர்ந்திருந்த திருமூலர் உலகமக்கள் உய்திபெறுதல் வேண்டும் என்னும் பேரருளால் தம் திருவுள்ளத்தே தோன்றிய எண்ணங்களை ஒராண்டுக்கு ஒரு திருப்பாட லாகக் கொண்டு மூவாயிரந் திருப்பாடல்கள் அருளிய திறத்தைத் திருமூலநாயனார் புராணம் 24, 25, 26 ஆம் பாடல்களில் சேக்கிழாரடிகள் விளக்கியிருத்தலாலும் திருமந்திரத்தை வடநூல் மொழிபெயர்ப்பெனக் கருது தற்குச் யூரீமந்த்ரமாலிகா என்னும் பெயரைத் தவிர அப்பெய ருடன் வடமொழியில் ஒருநூல் இருப்பதாகவோ அன்றி இருந்த தாகவோ கொள்ளுதற்குரிய சான்றினை அவர் குறிப்பிடாமையும் இங்குக் கருதத்தகுவதாகும்.

இறைவனூலாகிய சிவாகமங்கள் இருபத்தெட் டென்பதும், அவை அம்முதல்வனது ஈசான முகத்தி லிருந்து அருளிச் செய்யப்பெற்றன என்பதும்,

“அஞ்சனம்ேன்சிஅரிவையோர் பாகத்தன்

அஞ்சொடிருபத்து மூன்றுள ஆகமம் அஞ்சலிகூப்பி அறுபத்தறுவரும் அஞ்சாமுகத்தில் அரும் பொருள் கேட்டதே'

(திருமந், 57)

எனவும் வரும் திருமந்திரத்தாற் புலனாம். சிவபெருமான் அருளிய ஆகமங்கள் இருபத்தெட்டிற்கு மேலும் எண்ணிலவாக உள்ளன என்பதும் அவ்வாகமப் பொருள் களை யெல்லாம் பல ஆண்டுகளாக சிந்தித் துணர்ந்ததன் பயனாகவே திருமூலர் இத்திருமந்திரப் பனுவலை அருளிச் செய்துள்ளார் என்பதும்,

"அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணில் இருபத்தெண்கோடி நூறாயிரம் விண்ணவர் ஈசன் விழுப்பொருள் உரைத்தனர் எண்ணிநின்றப் பொருள் ஏத்துவன் நானே.” (திருமந். 58)