பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

577


என வரும் அவரது வாய்மொழியால் அறியப்படும்.

சிவபெருமானிடமிருந்து சத்தியும், சத்தியிடமிருந்து சதாசிவமும் அவர் பால் மகேசுவரரும் அவரிடமிருந்து பூரீகண்ட உருத்திரரும், அவர்பால் திருமாலும், அவரிட மிருந்து பிரமதேவரும் அவரிடமிருந்து உருத்திரரும் இம்முறையே உபதேசம் பெற்றனரென்றும், இவர்கள் தனித்தனியே உபதேச வாயிலாகப் பெற்றுணர்ந்த காரணம் காமிகம், வீரம், சிந்தியம், வாதுளம், வியாமளம், காலோத்திரம், சுப்பிரம், மகுடம் என்னும் இவ்வொன்பது ஆகமங்களையும் திருநந்திதேவர் ஒருங்கு கைவரப்பெற்றார் என்றும் ஆகமச் சிறப்பினை அறிவுறுத்தும் முறையில் அமைந்தன,

“சிவமாம்பரத்தினிற் சத்திசதாசிவம்

உவமா மகேசர் உருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மில் தாம்பெற்ற நவஆகமம் எங்கள் நந்தி பெற்றானே.” (திருமந். 62)

எனவும்,

“பெற்ற நல்லாகமங் காரணங்காமிகம் உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம் கற்றநல்வியாமள மாகுங்காலோத்திரம் துற்றநற் சுப்பிரமம் சொல்லும் மகுடமே” (திருமந். 63)

எனவும் வரும் திருமந்திரப் பாடல்களாகும். இங்குக் குறித்த ஒன்பது ஆகமங்களின் சாரமாகவே திருமந்திரத்தில் ஒன்பது தந்திரங்கள் அமைந்துள்ளன எனக் கருதுவாரும் உளர். இங்ங்னங் கூறுவதைக் காட்டிலும் சிவாகமங்களின் நுண்பொருள்களை ஒன்பது தந்திரங்களாகத் திருமூலர் வகைப்படுத்து உணர்த்தினார் எனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும் என்பர் அறிஞர்.

சிவாகமங்கள் தாம் கூறும் பொருள்களைச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு பாதங்களாக வகுத்துரைப்பன. தமிழகாமமாகிய திருமந்திரத்தில் வேதச் சிறப்பும் ஆகமச் சிறப்பும் ஒருங்கே உணர்த்தப்பெற்றன.

சை. சி. சா. வ. 37