பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


“பிறவித் துன்பத்தினின்றும் நீங்கி வீடு பேறடைதலே அறிவுடைய நன்மக்களின் கடமையும் செயலும் ஆகும். பிறப்பறுத்து வீடு பெறும் நிலை ஆருயிர் முதல்வனாகிய சிவனையடைந்தாலன்றிக் கை கூடாது. சிவன் ஒருவனே எல்லார்க்குந் தலைவன். சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை. அவன் படைத்தளித்தழிக்கும் மூவர்க்கும் முதல்வன். தாயினும் நல்லன். தேவர் முதலிய யாவரும் அவனையே தொழுவர். அவனால் தொழப்படுவார் ஒருவருமிலர். இடியும் முழக்கமும் ஈசன் உருவம். அயன் அரி அரன் மூவரும் ஆராய்ந்து நோக்குங்கால் இறைவனது அருளாகிய தொடர்ச்சியால் ஒருவரேயாவர். சிவனருளல்லது வேறு தெய்வமில்லை. சிவபெருமான் உயிர்கள் மேல் வைத்த பெருங்கருணையால் மன்னுயிர்கள் பாசப்பிணிப்பினின்றும் நீங்கி வீடுபேறடைதற்பொருட்டு வேதசிவாகமங்களை அருளிச் செய்துள்ளார். அவற்றின் வழியொழுகிப் பிறவிப் பெருங்கடல் நீந்தி வீடு பெறுதற்குரிய நற்செயல்களே அறிவுடைய நன்மக்களால் மேற்கொள்ளத்தக்கன. சிவபெருமான் ஆகமப்பொருளை நந்திதேவர்க்கு உபதேசித்தருளினார். அவர் கயிலையில் சனற்குமாரர் முதலிய முனிவர் நால்வர்க்கும் பதஞ்சலி வியாக்கிரர் ஆகிய முனிவர்க்கும் எனக்கும் உபதேசித்தருளினார். ஆகமப் பொருளைத் தமிழிற் சொல்லும் பொருட்டே என்னை இம்மூலனுடம்பில் இருக்கும்படி இறைவன் படைத் தருளினார். இறைவர் அருளின் வழியான் மூலனுடம்பிற் புகுந்து திருவாவடுதுறையிற் பல்லாண்டுகள் சிவயோகத்து அமர்ந்திருந்தேன். அரனடி நாள்தோறும் சிந்தை செய்து ஆகமம் செய்யலுற்றேன். இறைவன் ஆடியருளும் திருக்கூத்தின் சிறப்பினை அறிவுறுத்தும் மறைநூலாகிய இதனைச் செப்புதற்பொருட்டே யான் இங்கு வந்தேன். நான்பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுவதாகுக. யான் கூறிய ஞானம் மிக்க இம்மந்திரங்களை உளம் பொருந்திக் கேட்டுணர்வோர் இறைவனுடைய திருவடிகளில் தலைப்பெய்து இன்புறுவர்” என இப்பாயிரப் பகுதியில் திருமூலர் அறிவுறுத்தியருள்கின்றார்.

இந்நூலில் உள்ள ஒன்பது தந்திரங்களுள் முதற்கண்